Wednesday, August 17, 2011

கிறீஸ் பூதம் பின்னணியில் கோத்தபாய ராஜபக்­ஷ‌ அடித்துக் கூறுகிறார் மங்கள

நன்றி: வலம்புரி.
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-08-17 09:46:01| யாழ்ப்பாணம்]

<span title=மங்கள சமரவீரா" title="மங்கள சமரவீரா" class="alignright size-full wp-image-21490" height="120" width="120">படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ஷ‌வின் உத்தரவிற்கமைய படைத்தரப்பின் புலனாய்வுத்துறையினரே மர்ம மனிதர்களின் (கிறீஸ் பூதம்) பின்னணியில் இருக்கின்றனர்.இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் கிறீஸ் பூதம் களேபரத்தை இட்டு கருத்துத் தெரிவித்த மங்கள சமரவீர மேலும் தெரிவிக்கையில்,வெள்ளை வாகனங்களைக் கொண்டு முன்னர் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த படைத்தரப்பின் புலனாய்வுத்துறையினர் தற்போது மர்ம மனிதர்கள் எனும் பேரில் பொது மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். மர்ம மனிதர்கள் என பொதுமக்களால் பிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் படைத்தரப்பின் புலனாய்வுத் துறையினர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட மர்ம மனிதர்களில் பலரும் தாம் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காட்டியதும் அவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.கிராமங்கள் தோறும் படை முகாம்களை அமைப்பதற்காகவே படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ஷ‌ இவ்வாறு செயற்படுகின்றார்.

அத்துடன் இப்பிரச்சினையை காரணம் காட்டி ஏற்கெனவே படைத் தரப்பைச் சேர்ந்த 5 ஆயிரம் படையினர் கிழக்கு மாகாணத்திற்கு அனுப் பிவைக்கப்பட்டுள்ளதாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.