Wednesday, August 17, 2011

.சிபிஎஸ்இ பள்ளிகளை இழுத்து மூடு

எப்படியோ ”கருணாநிதி-ஜெயலலிதா’” போராட்டம் என்று ஆக்கப்பட்டுவிட்ட சமச்சீர்க் கல்விப் பாடத்திட்டங்கள் பள்ளிகளில் போதிக்கப்படத் துவங்கிவிட்டன. ஆனால் பிரச்சினை முற்றாகத் தீரவில்லை. தீர்க்கும் எண்ணமும் யாரிடமும் இல்லை. மேலும் செய்யப்படவேண்டியது என்ன என்பது குறித்துத் திரட்டப்பட்ட கருத்துகளின் ஒரு பகுதி.

தமது பிள்ளைகளைப் 10ஆம் வகுப்பு வரை மெட்ரிக் பள்ளிகளில் படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கும் 11ஆம் வகுப்பு வந்ததும் இந்தத் தரம் பற்றிய நினைப்பே மறைந்து விடுவது எப்படி?


இது போதாதென்று தம் பிள்ளைகளை இன்னும் அதிமேதாவி ஆக்க வேண்டும் என்ற ஆசையில் மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்க வைக்கும் பெற்றோர்கள், அவர்கள் 10ஆவது முடித்த பின்னர், மாநில வாரியப் பள்ளிகளில் கொண்டு போய்ச் சேர்க்கிறார்கள். ஏனென்று கேட்டால் அங்குதான் சிபிஎஸ்இ பள்ளிகளை விடக் கூடுதல் மதிப்பெண் வாங்க முடியும் என்று பதிலளிக்கின்றனர்.. மதிப்பெண் வந்தால் தரம் தேவையில்லை என்பது எந்த வகையில் நியாயம்?

தமிழ்நாட்டில், மத்தியஅரசு, சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் 27கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நடத்துகின்றது.. சி.பி.எஸ்.இ. அங்கீகாரத்துடன்180தனியார் பள்ளிகளும் தமிழகத்தில் இயங்குகின்றன. இந்த ஆண்டு மேலும்30 பள்ளிகளுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளுமே சிபிஎஸ்இ பள்ளிகளாகிவிடக் கூடும்...

பணக்காரர்கட்கு ஆங்கிலவழிக் கல்வி, ஏழையருக்கு தமிழ்வழிக்கல்வி என்பது எப்படி சமச்சீராகும்?

அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி முறையைக் கொண்டுவந்தவர் மறைந்த தமிழக முதல்வர் பக்தவத்சலம் ஆவார். மாநகராட்சிப் பள்ளிகளுக்கும் அதனை விரிவுபடுத்தியவர் ஸ்டாலின். அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழியும் உண்டு என்று ஆக்கியதால் தமிழ்வழி இடங்கள் காலியாக உள்ளன.

எடுத்துக்காட்டாக அசோக்ந்கர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்புக்குத் தமிழ் வழிக்கல்விக்கு75பேரும், ஆங்கிலவழிக்கல்விக்கு299பேரும் சேர்ந்துள்ளனர். கோடம்பாக்கம் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளீயில் தமிழ்வழியில்16பேரும், ஆங்கிலவழியில்145பேரும் சேர்ந்துள்ளதாகத் தக்வல்.

மத்திய அரசில் பணியாற்றும் அதிகாரிகளின் வாரிசுகளுக்காக ஏற்படுத்தப் பட்டவையே கேந்திரியா வித்யாலயா பள்ளிகள். ப்ல்வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டாலும் கல்விகற்பதில் பாதிப்பு ஏற்படக் கூடாதென்பதே நோக்கம். இப்பள்ளிகளில் தமிழே படித்திடத் தேவை இல்லை.

இந்தியர்கள் எல்லோரும் சமமென்றால், அதிகாரிகளுக்குமட்டும் என்ன தனிச்சட்டம்? இன்று காலமும் மாறிவிட்டது. அனைத்துலக ரீதியில் குப்பனும் சுப்பனும் கூட வேலைக்குச் செல்ல முடிகின்றது. இந்தியர்கள் வெளிநாடு சென்று மேற்படிப்பினைத் தொடர சில தேர்வுகள் எல்லாம் எழுத வேண்டியுள்ளது. அதனால் அனைத்துலகத் தேவைகளை ஈடுகட்டுவதற்கு இணையான கல்வித் திட்டத்தையே கொண்டு வந்துவிடலாமே?

இண்டர்நேஷனல் ஸ்கூல் பாடத் திட்டப் பள்ளிகளும் தமிழகத்தில் இயங்குகின்றனவே? அவை யார் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன?

இன்று நமக்குக் கிடைத்துள்ள இந்தப் பொதுப் பாடத் திட்டத்தையேனும் நாம் விடாது போராடி காப்பாற்றிக் கொள்ள வேண்டும், இந்தப் பொதுப் பாடத்திட்டம் முழுமையடைய சிபிஎஸ்இ பள்ளிகளை இழுத்து மூட வேண்டும். மாநிலக் கல்வி வாரியம், மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல் ஆகிய நான்கு வாரியங்களை நீக்கிட எந்த அறிவிப்பும் இன்றளவும் இல்லை. இந்த நான்கு வாரியங்களையும் ஒருங்கிணைத்து, ஒரே தமிழ்நாடு மாநிலப் பள்ளிக் கல்வி வாரியம் அமைக்கப்பட வேண்டும்

தாய்மொழிவழிக் கல்வியே தமிழன் தர உயரத் துண நிற்கும். மழலையர் பள்ளியிலிருந்து, பள்ளி இறுதிவரையேனும் தமிழே பயிற்று மொழி ஆக்கப்படல் வேண்டும். அதற்குக் கல்வியை மத்திய அரசிடமிருந்து மாநில அதிகார வரம்புக்குள் கொண்டு வரவேண்டும்.
அப்பொழுதுதான் சமச்சீர் கல்வி என்று சொல்ல முடியும் ?

1 comments:

  1. மிக சிறப்பாக சொன்னிர்கள்,
    தமிழக அரசின் கட்டுபாடின்றி தான்தோன்றிதனமாக இயங்கும் சிபிஎஸ்இ போன்ற பள்ளிகளை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது
    இந்திய அரசின் ஒரே நோக்கம் இந்தி, இந்தி, இந்தி மட்டுமே.

    ஒன்றை நான் இங்கு பதிவு செய்ய விழைகிறேன்
    இது என் தனிபட்ட கருத்து

    என்ன பொருத்தவரை இந்தியா என்னும் கூட்டாட்ச்சியில் இருக்கும்வரை தமிழை வளர்ப்பது என்பது மிக கடினமான ஒன்று
    தமிழக அரசால் தனிச்சையாக எந்த ஒரு முடிவையும் எடுக்க இயலாது.
    இந்தியா தமிழனின் தாய் நாடாம் ஆனால் இந்தியாவின் முதன்மை மொழியோ இந்தி, ஆங்கிலம்.
    எடுத்து காட்டாக சில
    இந்தியாவின் பாராளுமான்றத்தில் இந்தியும், ஆங்கிலம் மட்டுமே
    நடுவன அரசின் அத்தனை தேர்வுகளும் இந்தி, ஆங்கிலத்தில்தான் நடத்தபடுகின்றன,
    தமிழில் நடத்த போராட்டம் நடத்த வேண்டியுள்ளது, போராடினால் நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என சில கூட்டங்கள் திரித்து பேசுகின்றன

    எந்த ஒரு விசயமானாலும் இந்தியை அனைத்து பொது இடங்களிலும் மலிவாக்கி
    இந்தியை தேவையுள்ள மொழிபோலவும் தமிழை படித்தால் ஒரு பயனும் இல்லாததுபோல் மாற்ற முயற்சிக்கிறது இந்த ஈன இந்திய அரசு அதில் முடிந்த அளவிற்க்கு வெற்றியும் பெற்றுள்ளது.
    Central government trying to make hindi as a soft corner among tamilnadu
    and making them as a part of day-2-day life.

    தமிழ்நாட்டில் உள்ள உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட
    இந்திய அரசின் காலை பிடித்து தமிழகம் கெஞ்சிகொண்டிருக்கிறது
    என்றால் நாம் என்ன விடுதலையை அடைந்துள்ளோம்.

    தமிழை மட்டும் அல்ல தமிழினின் உயிரை காப்பாற்ற இந்தியாவின் காலை நக்க வேண்டிய அவல நிலை.
    இலங்கை கடற்படை தமிழனை நாயை சுடுகிற மாதிரி சுட்டு கொன்று குவிக்கிறான் இந்தியா இதன் நிமத்தமாக இலங்கைக்கு ஒரு கண்டன குரலோ, இல்ல ஒரு பதிலடியோ கொடுத்ததில்லை இது தமிழனின் சொந்த நாடா இருக்கவே முடியாது
    தமிழனின் வரிபணத்தை பறித்து கொண்டு தமிழனை அடிமைகளாக வைத்திருக்கிறது.

    இந்தியை தமிழகத்தின்மேல் வலுகட்டாயமாக திணித்து அதை எதிர்த்து போராடிய மாணவர்களை நசுக்கியது,
    விளைவு நூற்றுகண்கான தமிழர்கள் உயிர்கள் பலியாயின, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தார்கள். இது வெள்ளையினின் ஆட்சியைவிட எவ்வளவு கொடுங்கோல் ஆட்சி இது.

    இதை நாம் பாடமாக படிக்க முடியுமா முடியாது ஏன் என்று விடை உங்களுக்கே தெரியும்!!

    ஆக மொத்தம் இந்தியா என்ற அரசியல் அமைப்புக்கு தமிழகத்தின் வளங்களும், தமிழனினெ வரிபணம் வேண்டும் தமிழ் மொழியை பற்றியோ, தமிழினின் உயிரை பற்றியோ எந்த ஒரு கவலையும் கிடையாது.
    இலங்கைகாரன் அடித்து கொன்றாலும், கர்நாட்டகாரன் அடித்தாலும், தண்ணிர் தர மறுத்தாலும்,
    மலையாளத்தான் தண்ணிர் தராவிட்டாலும்,
    இலங்கை இராணுவத்துக்கு இந்தியா பயிற்ச்சி, போர் கருவிகள், தளவாடங்கள் என எதுவேண்டுமானாலும் கொடுக்கலாம்.
    இப்படி எல்லாத்தையும் பொத்திகொண்டு இந்தியா விளையாடும் கிரிக்கெட்டுக்கு(அதில் ஒரு தமிழனாவது விளையாட மாட்டானா என்ற ஏக்கம் ஒருபுறம்) கைதட்டிகொண்டு இருக்கவேண்டும்

    இவன்
    pugal.na@gmail.com

    ReplyDelete

Kindly post a comment.