லண்டன் கலவரத்தில் தொடர்புடையதாக 16 வயது சிறுவன் போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளான். இவன் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதியன்று சமூக விரோதி ஒருவனை போலீசார் சுட்டுகொன்றனர் . இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் லண்டன் நகர் முழுவதும் பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கலவரத்தின் போது கண்காணிப்பு கேமிராவில் பதிவு செய்யப்பட்ட காட்சியினை வைத்து 68 வயது முதியவர் ஒருவரை , 16 வயது சிறுவன் அடித்து கொன்றதாக அவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேற்கு லண்டனில் இலாயிங் தெருவில் 68 வயதுடைய ரிச்சர்ட் பவுஸ் என்பவர் தெருவோரம் படுத்துக்கொண்டிருந்தார்.அப்போதுஅங்கு வந்த அந்த சிறுவன் முதியவரை சரமாரியாக தாக்கியுள்ளான். இதில் தலையில் காயமடைந்த முதியவர் அதே இடத்தில் இறந்தார்.
இதனை கண்காணிப்பு வீடியோ காட்டி கொடுத்ததால், அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு அவன்மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் அவன் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டான். சிறுவனுக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நீதிபதியிடம் வாதிட்டார்.
எனினும் சிறுவன் பெயர், ஊர் பற்றிய விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை. முன்னதாக அவனது தாய் சிறுவனுக்கான ஜாமின் மனு செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Wednesday, August 17, 2011
Subscribe to:
Post Comments (Atom)
போராட்டம் நடத்துவது தவறில்லை, இப்படி காட்டு மிராண்டித்தனமா உயிர்களை பலிவாங்குவது எந்த விதத்தில் நியாயம்.
ReplyDeletewww.panangoor.blogspot.com