Friday, August 5, 2011

டக்ளஸ் தேவானந்தாவைக் கைது செய்யாதது ஏன்?

இந்தியாவில் தேடப்படும்தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கை அரசியல்வாதி டக்ளஸ் தேவானந்தாவை ஏன் கைது செய்யவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

1986ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கி இருந்த போது, சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். மேலும் 4 பேரை காயப்படுத்தினார்.

இந்த சம்பவத்தில் டக்ளஸ் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் கழித்து ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.

வெளியே வந்த பிறகு, 1988 ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 வயது சிறுவனை கடத்திச் சென்று, 7 லட்சம் கொடுத்தால் விடுவேன் என்று மிரட்டினார் என்று கீழ்ப்பாக்கம் போலீசில் டக்ளஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

1989 ம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் இலங்கைக்கு தப்பிச் சென்றார்.

இந்த நிலையில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவர் இலங்கை அதிபர் ராஜபக்வுடன் கடந்த ஆண்டு இந்தியா வந்தார்.

அவரை ஏன் அப்போது கைது செய்யவில்லை என்று விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசை சென்னை உயர்மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

3 comments:

  1. இந்த கொலைகாரனை கைது செய்தால் அந்த கொலைகாரன் இந்தியனுடன் கோபித்துக் கொள்வான் என்ற பயம் தான் காரணம். பின் சீனா உள் நுழைந்து.....!!!

    ReplyDelete
  2. ஒண்ணுமே புரிய மாட்டேங்குது நண்பரே...
    இந்தியா முதுகெலும்புள்ள நாடா என்பதே சந்தேகமாகிப் போகிறது

    ReplyDelete
  3. ராஜகோபாலன், இதை வைத்து இந்தியா முதுகெலும்புள்ள நாடா என்று நீங்கள் சந்தேகித்தால் அது தவறு.
    நான் அறிந்த வரை ரணில் ஆட்சி காலத்தில் 2004 இவர்(டக்ளஸ் தேவானந்தா) எதிர்கட்சியில் இருந்த போது இந்தியா வந்து குமுதம் விகடனுக்கெல்லாம் சுதந்திரமாக பேட்டி அளிந்துள்ளார். அப்போது எல்லாம் டக்ளஸ் தேவானந்தாவைக் கைது செய்யாதது ஏன்? என்று தமிழ்நாட்டில் யாரும் பிரச்சனை எழுப்பவில்லை. தங்களுக்கு பிடிக்காதவர்களை கொன்று ஒழிக்கும் புலிகளின் முயற்சி படு தோல்வி அடைந்தது இவரிடம் மட்டுமே. இவரை கொல்ல 13 கொலை முயற்சிகள் 2 தற்கொலை புலிகள் நடத்தினர். எல்லாவற்றிலும் படு தோல்வி.
    இது ஒன்று மட்டுமே புலி ஆதரவாளர்களின் டக்ளஸ் தேவானந்தா மீதான ஆந்திரத்திற்க்குகான (டக்ளஸ் தேவானந்தாவைக் கைது செய்யாதது ஏன்?)காரணத்தை அறிய கூடியதாக உள்ளது.
    Rssairam நன்றி.

    ReplyDelete

Kindly post a comment.