சுவீடனில் உள்ள ஏஞ்சல் ஹோல்ம் நகரை சேர்ந்தவர் ரிச்சர்ட் ஹேண்டில் (31). இவருக்கு அணு விஞ்ஞானம் மீது அலாதிபிரியம். எனவே, அது குறித்த பல புத்தங்களைப் படித்து தனது அறிவை பெருக்கி கொண்டார். அதை தொடர்ந்து வீட்டில் தானே அணுஉலையை அமைத்து அணுசக்தியை உருவாக்க விரும்பினார்.
அதற்காக, தனது வீட்டு சமையல் அறையில் அணு உலையை அமைத்தார். அமெரிக்காவில் இருந்து கதிர்வீச்சை வெளிப்படுத்தும் யுரேனியம் போன்றவற்றை வாங்கினார். அதற்காக ரூ.2 1/2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை செலவு செய்தார். அவற்றை தனது சமையல் அறையில் உள்ள சிறிய “ஸ்டவ்” அடுப்பின் மூலம் வறுத்து கதிர்வீச்சை வெளிப்படுத்துவது எப்படி என்பது குறித்து தெரியவில்லை. அது குறித்து, சுவீடன் அணு அறிவியல் கழகத்திடம் கருத்து கேட்டார். அதன் பின்னர்தான் இவர் வீட்டில் அணு உலை அமைத்து இருப்பது தெரிய வந்தது.
அனுமதி இன்றி அணு உலை அமைப்பது சட்டத்தை மீறிய செயலாகும் எனவே, இது குறித்து சுவீடன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று ரிச்சர்ட் ஹேன்டிலை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இன்றைய மாலை மலரில் படித்த செய்தி இது!
இன்றைய மாலை மலரில் படித்த செய்தி இது!
அரிசி உலைக்குப் பதில் அணு உலை!
ReplyDelete