Friday, August 5, 2011

பட்டினிக் கொடுஞ் சிறைக்குள் பதறுகின்ற சோமாலியா...

பசி,பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியவிற்கு இந்தியா சார்பில் உணவுப்பொருட்கள் அனுப்பிட இந்தியா முடிவு செய்துள்ளது.

ஆப்ரிக்க நாடான சோமாலியா, எத்தியோபியா,கென்யாவின் சில பகுதிகள் ஆகிய நாடுகளி்ல் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஐ.நா. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்நாடுகளை பஞ்சத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது. 7.5 மில்லியன் மக்கள் ஒரு வேளை உணவுக்காக ஏங்கி வருகின்றனர். இதுவரை நடத்திய ஆய்வின் 5வயது குறைவான 29 ஆயிரம் குழந்தைகள் , உணவு மற்றும் ஊட்டசத்து குறைபாடு காரணமாக இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஐ.நா.வின் உலக உணவு திட்டத்தில்இந்தியா அங்கம் வகிக்கிறது. இத்திட்டத்தின் படி இந்தியா சோமாலியாவிற்கு உணவுப்பொருட்களை அனுப்பி வைக்க உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு‌ வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்ற ஆண்டு வங்கதேசத்தில் கடும் உணவுப்பஞ்சம் ஏற்பட்ட போது இந்தியா அரசியினை அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

சோமாலியா, எத்தியோபியா, இரிடிரியா, கென்யா, உகண்டா ஆகிய நாடுகளில் நிலவியுள்ள உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள 1.1 மில்லியன் மக்களுக்கு அடிப்படை தேவையினை நிறைவேற்ற அவசரகாலமாக 9கோடி ரூபாய் நிதி தருமாறு உலக நாடுகளை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.