நகைச்சுவைக்கென ஆங்கிலத்தில் அளவிறந்த இணைய தளஙகள் உள்ளன. தமிழில் அவ்வாறு இருக்கின்றனவா என்பதை இனிமேல்தான் தேட வேண்டும். இன்றைய சமூகச் சூழலை எதிரொலிக்கும் வண்ணம் நான்கு நகைச்சுவைத் துணுக்குகள் நண்பர் சோமு இணையத்தில் படித்துச் சொன்னது.
௧. மிக நன்றாகப் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சிபெறும் மாணவர்கள், தொழிற்கல்வியில் சேர்ந்து மருத்துவராகவோ, பொறியாளராகவோ வேலைக்குச் சென்று விடுகின்றனர்.
௨. இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறுவோர், எம்.பி.ஏ. படித்து முதல் வகுப்பில் தேறி நிர்வாகிகளாகித் தொழில் புரிவோரைக் கட்டுப்படுத்துகின்றனர்.
௩. மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசியலில் நுழைந்து அமைச்சர்களாகி மேற்குறித்த இருசாரரையும் ஆட்டிப்படைக்கின்றனர்.
௪. தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்கள் தாதாக்களாகி மற்ற எல்லோரையும் கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
௫. பள்ளிக்கூட வாசனையே இல்லாதவர்கள் சாமியார்களாகி அருளாசி வழங்கத் துவங்குகிறார்கள். அனைவரும் அவரிடம் சரணாகதி அடைந்து விடுகின்றனர்.
இவை நகைச்சுவைதான். !! மெய்யாகவே நகைச்சுவைதான்!!
Wednesday, August 3, 2011
Subscribe to:
Post Comments (Atom)
நடைமுறை நகைச்சுவை!
ReplyDeleteநகைச்சுவை அல்ல . நெத்தியடி... அருமை.
ReplyDelete