நூறு தலைமுறை தெரிந்த யூதனும், நான்கு தலைமுறை கூடத் தெரியாத தமிழனும்!
தமிழர்களுக்கென தனித்தன்மையான தொன்மை வரலாறு உண்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை, படைபுக்கலைகள் என்று சகல துறைகளிலும் நிபுணத்துவத்துடன் கொடிகட்டிப் பறந்தவன் தமிழன். நமது முன்னோர்களின் அருமை பெருமைகளை அறியாமலும் போற்றாமலும் நாம் இருந்து வருகின்றோம்.
வரலாற்றைப் பதிவு செய்யும் வழக்கம் யூதர்களுக்கு அதிகம். இன்றளவும் அதைக் கடைப்பிடித்து வருகின்றனர். ஒவ்வொரு யூதன் வீட்டிலும் ஒரு கைத்தடி இருக்கும். அதன் மேல்பாகத்தில் அந்தக் குடும்பத்தலைவனின் பெயரை எழுதி வைப்பார்கள். அவர் மரணமடைந்ததும் அந்தக் கைத்தடி அவனது மகனிடம் ஒப்படைக்கப்படும். அவன் பெயர் எழுதப்படும். தலைமுறை தலைமுறையாக இவ்வாறு சேரும் கம்புகளை ஒரு பெட்டிக்குள் போட்டு அதனைப் புனிதப் பொருளைப் போல மதித்துப் பாதுகாத்து வருகின்றார்கள். இதனால் ஒரு யூதனுக்கு அவனுக்கு முன்னால் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அவனது மூதாதையர் பெயர் விபரம் கூட அறிந்து கொள்ள முடியும். ஆனால், தமிழனுக்கு நான்கு சந்ததிக்கு மேல் விபரம் தெரியாது. நாம் எதையும் வரலாற்றுரீதியாக ஆவணப்படுத்துவதில்லை.
கடந்த வியாழன்று ஈரோடு புத்தகத் திருவிழாவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆற்றிய உரையிலிருந்து.
0 comments:
Post a Comment
Kindly post a comment.