Saturday, August 6, 2011

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கோவில் திருவிழா! 50ஆண்டுகளாக!


திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டி கோட்டை கருப்பணசாமி கோயிலில், 4,000 க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் பலியிடப்பட்டன. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை முடிந்த இரண்டாவது வெள்ளிக்கிழமை இரவு, விழா நடக்கும். நேற்று நடந்த விழாவில், நேர்ந்து விடப்பட்ட ஆடு, கோழிகள் பலியிடப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

தோரணம், ஒலி பெருக்கி, கலை நிகழ்ச்சிகள் இன்றி 50 ஆண்டுக்கும் மேலாக விழா நடத்தி வருகின்றனர். இதில், ஆண்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். யாரும் மது அருந்துவது இல்லை என்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய சிறபம்சமாகும்.

மிச்சமாகும் இறைச்சியை கோயிலில் புதைத்து விடுவர். இவ்விழாவில் மதுரை, கோவை, தேனி, சிவகங்கை, விருதுநகர், கரூர் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.

ப்ளூ கிராஸ் அமைப்பினர் இது போன்ற கோவில் விவகாரஙகளில் தலை இடுவதில்லைபோலும்!

பெண்கள் மட்டுமே பங்கேற்கும் ஒள்வையார் விரதம் தென்மாவட்டங்களில் உண்டு. உப்பில்லாத கொளுக்கட்டைகள் செய்து இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்து தின்பார்கள். ஆடவர்களுக்குக் கொடுக்க மாட்டார்கள் ஆனால், ஆடவர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் திருவிழாவை இப்பொழுதுதான் கேள்விபடுகிறேன். தோரணம், ஒலிபெருக்கி, கலைநிகழ்ச்சிகள் இல்லாத கோவில் திருவிழாவும் ஓர் அதிசயமே.

திருச்செந்தூர், கன்னியாகுமரி கோவில்களில் ஆடவர் மேல்சட்டை/மேலாடை அணியக் கூடாது. கேரளாவில் பல கோவில்களில் இதே கதைதான். அளவுக்குமேலான கூச்ச சுபாவம் உடையவர்களும், மிக மிக ஒல்லியானவர்களும் அடையும் தொல்லைகள் ஏராளம். மிகப் பலர் இதனாலேயே கோவிலுக்குள் செல்வதில்லை. மேலாடையோ அல்லது சட்டையோ அணிந்து செல்ல இதர கோவில்களில் அனுமதிக்கும்போது இஙுகு மட்டும் ஏன் இந்தத் தடை?

0 comments:

Post a Comment

Kindly post a comment.