லஞ்சக் கணக்கைக் காட்டுவதற்கொரு இணயதளம்!
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன், பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர். நோக்கியா நிறுவனம் வெற்றிபெற்ற கதையை விரிவாக விவரிக்கும் நோக்கியா: கொள்ளை கொள்ளும் மாஃபியா' என்ற புத்தகம் இவரது சமீபத்திய ஹிட். சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.
http://nchokkan.wordpress.com/ இது இவரது வலைப்பூ. ஆகஸ்டு மூன்றாம் தேதியில் வெளியான மீடியா வாய்ஸ் என்ற வார இதழில் இவர் அறிமுகப்படுத்தியுள்ள இணையதளத்தின் முகவரி:
http://www.ipaidabribe.com/
இந்த இணைய தளத்தைத் தொடங்கியிருபவர் பெயர் ரகுநந்தன். ஒரு முன்னாள் அரசு அதிகாரி. சென்ற ஆண்டு ஆகஸ்டில் துவங்கப்பட்டது. இந்தியா முழுவதிலுமிருந்து இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட நகரஙகளில் தரப்பட்ட லஞச நிகழ்வுகள் பதிவாயிருக்கின்றன. இவை எல்லாமே சாதாரண அதிகாரிகள் வாங்கிய லஞ்சம்தான். இதன் மொத்தத் தொகை ஏழுகோடி.
இந்த இணைய தளம் எப்படி இயங்குகிறது? லஞசம் கொடுத்த ஊர், அலுவலகம், எதற்காகக் கொடுக்கப்பட்டது? கேட்டது எவ்வளவு? கொடுத்தது எவ்வளவு? என்று எல்லா விபரங்களையும் பதிவு செயயலாம். விரும்பினால் முகவரி தரலாம். இல்லை என்றால் வேண்டாம். பெறும் தகவல்கள் உரியவர்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றது. எடுக்கப்படும் மேல் நடவடிக்கையையும் பதிவு செய்கின்றது.
இந்தியாவிலேயே மிக அதிகம் லஞ்சம் வாங்குகின்ற முதல் ஐந்து நகரங்கள்: பெங்களூரு, மும்பை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா.
இந்த இணைய தளத்தில் லஞ்சம் எதுவும் கொடுக்காமல் வேலையை சாதித்துக்கொண்ட பெருமையையும் பதிவு செய்யலாம்.
ரகுநந்தனை அறிமுகப்படுத்திய படைப்பாளிக்கும், அதனைத் தமிழில் நமக்குத் தந்த மீடியா வாய்ஸ் வார இதழுக்கும் நன்றி சொல்வது எனது கடமையாகின்றது. இத சிறப்பு ஆசிரியர் சரத் குமார் என்பது ஓர் சிறப்புத் தகவல். மேலும் அதன் ஆசிரியர் குழுவில் மூன்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருப்பதும் சிறப்புத் தககவல்தான்.
தமிழகத்தில் உள்ள இலஞ்சம் கொடாதோர்/ ஒழிப்பு/ ஐந்தாவது தூண் போன்ற அமைப்புக்கள் தமிழகத்திற்கென்று தமிழில் இது போன்று ஒரு இணைய தளத்தினைத் துவக்கலாம்.
புயல்வேகப் புலனாய்வு இதழ் என்று அறிமுகப் படுத்தியுள்ள மீடியா வாய்ஸ் கூட இந்தப் புனிதமான பணியினைத் துவக்கலாம்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.