Tuesday, August 9, 2011

தனி ஈழத்திற்கு உரம் ஊட்டுகிறது திபெத்தின் நாடுகடந்த அரசாட்சி!

நாடுகடந்த திபெத்திய அரசின் பிரதமராக நாற்பத்துமூன்று வயதானLobsang Sangay தேர்ந்தெடுக்கப்/நியமிக்கப் பட்டிருக்கின்றார். (படம் மேலே) நமது நாட்டில் உள்ள டார்ஜிலிங்தான் இவரது பிறப்பிடம். இவரது பெற்றோர், தலாய்லாமாவோடு ஐம்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கு அடைக்கல்ம் தேடிவந்தவர்கள். அகதியாக வந்தவர்களின் வாரிசு ஆட்சியதிகாரத்தில் அமர்ந்துள்ளது. மேலும் இவர் ஒருமுறையேனும் பார்வையாளராகக் கூட திபெத்திற்குச் சென்றதே இல்லை என்பதுதான் வியப்பிற்குரிய செய்தி.

ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக திபெத்தை ஆட்சிசெய்த தலாய்லாமாவிடமிருந்து பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள, லோப்சங்க் சங்கை, பதவியேற்பு நிகழ்ச்சியில், சுதந்திரமே திபெத்தியர்களின் முதல் குறிக்கோள் என்று முழக்கமிட்டுள்ளார்.

இருப்பிடம் உள்ளிட்ட சகல வசதிகளையும் திபெத்தியர்களுக்கு இந்தியாவில் ஐம்பத்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்படுத்தித் தந்துள்ளது இந்திய அரசாங்கம். அதனால் ஏற்பட்டுவரும் எதிர்விளைவுகளயும் அனுபவித்து வருகின்றது.

இந்தியா முழுவதும் ஒருலட்சம் திபெத்தியர்கள் வாழ்கின்றனர். உலகம் முழுவதும் நாற்பதாயிரம் திபெத்தியர்கள் உள்ளனர். ஆறு மில்லியன் திபெத்தியர்கள் திபெத்தில் வசிக்கின்றனர்.

உயிருடன் வாழும் இலங்கைத் தமிழர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கையை யாரும் இதுவரை கூறவில்லை.

திபெத்தியர்களிடம் காட்டிடும் காருண்யத்தில் பாதியையாவது ஈழத்தமிழரிடம் காட்டக்கூடாதா, இந்திய அரசாங்கம்?

2 comments:

  1. நல்ல செய்தி தந்துள்ளீர்கள்.பகிர்வுக்கு நன்றி.இந்தியா இனியாவது யோசிக்குமா?அல்லது தமிழர்கள்தான் யோசிக்க வைப்பார்களா?

    ReplyDelete
  2. தலாய்லாமாவும் நாடுகடந்த அரசின் அங்கீகாரமும்;_ ஜனவரி9,2011-பதிவையும் படிக்கலாம்.தலாய்லாமா.காம் தனி இணைய தளமே இயங்குகின்றது. படித்தால் பிரமிப்பூட்டும்.டாலர் தேசத்தின் கைவண்ணம்.

    ReplyDelete

Kindly post a comment.