கூடங்குள அணுமின் நிலையத்தை இழுத்து மூடவேண்டும்!
தூத்துக்குடியில் நடந்த மீனவர் குறைதீர்ப்பு கூட்டத்தில், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடியில் மாவட்ட மீனவர் குறைதீர்ப்பு கூட்டம், கலெக்டர் ஆஷிஷ் குமார் தலைமையில் நடந்தது. மீன்துறை உதவி இயக்குனர் பிரதீப் குமார், இணை இயக்குனர் அமல் சேவியர், அனைத்துத் துறை அதிகாரிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.
கடலோர மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் புஷ்ப ராயன் பேசும்போது,"" மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும், நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் உலை தேவையில்லை. அதை உடனடியாக மூட வேண்டும்,'' என்றார். மற்ற மீனவர்களும் இதே கருத்தை வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த கலெக்டர் ஆஷிஷ் குமார்,""கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக நெல்லை கலெக்டர், மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது, மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் வருகிறது. எனினும், உங்கள் கருத்துக்கள், தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படும். மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில், இதில் அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்,'' என்றார்.
அறிவியலில் ஆனானப்பட்ட ஜாம்பவான் நாடுகளே, அணுமின் உலைகளை இழுத்து மூடி வருகின்றன. கடந்த இருபது ஆண்டுகளூக்கும் மேலாகப் புதிய அணு உலைகளை அமைப்பதும் இல்லை. இந்தியாவிற்கு மட்டும் ஏன் இந்த அணு உலை ஆசை?
0 comments:
Post a Comment
Kindly post a comment.