எண்பத்தைந்து பொறியியற் கல்லூரி மாணவர்கள் கதி என்ன?
இது தமிழ்நாட்டில் அல்ல, மஹாராஷ்ட்ராவில். பாதிக்கப்பட்டுள்ளது எண்பத்தைந்து மாணவர்கள் அல்ல. எண்பத்தைந்து கல்லூரி மாணவர்கள்.
குறந்த பட்சம் நூற்றி எண்பது நாட்கள் கூட கல்லூரிக்கு வராத மாணாக்கர்களுக்குத் தேர்வு எழுதிட அனுமதி கொடுக்கப்பட்டது எப்படி?
ஒவ்வொரு ஆண்டும் ஜுலை பதினைந்தாம் தேதிக்குள் புதிய கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்காததன் காரணம் என்ன?
இவ்வாறு பல வினாக்களை எழுப்பிய உச்ச நீதிமன்றம், பாம்பே உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் இவை குறித்து விசாரணை நடத்திட வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.
எந்த மாநிலமாயினும் ,. எந்தக் கட்சியாயினும் அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே இனம்தான் என்பதற்கு இந்தச் செய்தியும் ஒரு உதாரணம்.
நன்றி:-இந்தியா.கொம்
0 comments:
Post a Comment
Kindly post a comment.