முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை செப்டம்பர் 9ம் தேதி தூக்கிலிடுமாறு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தமிழகமெங்கும் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்திவருகின்றனர்.
மேலும், தூக்குதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மூவரின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு மீது இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி உட்பட பல வழக்கறிஞர்கள் வாதாடினர். இதையடுத்து மூவரின் தூக்கை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தூக்கில் போட தடை விதிக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கொண்டாடினர்.
மேலும், தூக்குக்கு எதிராக தமிழகமெங்கும் போராடியோர் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
Short URL: http://www.ethirinews.com/?p=௧௫௮௧௪
0 comments:
Post a Comment
Kindly post a comment.