அவரது ஒரு வயதில் தந்தை குடும்பத்தை விட்டுப் பிரிந்தார். மூன்றாம் வயதில் தாய் மரணித்தார். பதினைந்து நபர்கள் கொண்ட பெரியதோர் குடும்பச் சூழல். குறைந்த வருவாய். பதிமூன்று வயதில் ஏற்பட்ட விபத்தில் கண்ணில் பார்வைக் கோளாறு. பதினெட்டாம் வயதுக்குள் முற்றிலுமாகப் பார்வை இழப்பு. இவரது பெயர் ஜின்னா.
பட்ட இன்னல்கள் சொல்லி மாளாது. பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளி, மதுரை கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், இளஙகலை முதுகலைப் பட்டங்களுக்குச் சொந்தக்காரர் ஆனார். பாளை . பள்ளியில் வயது காரணமாக அனுமதி மறுக்கப்பட்டபோது, இவருக்கு உதவி செய்தவர், அப்போதைய சட்டமன்ற உறுப்பினர், திருமதி. இராசாத்தி குஞ்சிதபாதம் அம்மையார். பின்னர் இவரைப்போலவே மாற்றுத் திறனாளியான ஜி.ஜெயராமனின் வழிகாட்டுதல் கல்லூரிப் படிப்பிற்குத் துணை நின்றது.
அமெரிக்காவில் உள்ள போஸ்டன் ந்கரில் ௧௯௮௧-ல் ரோட்டரி இண்டர்நேஷனல் விருது பெற்றது இவரது அருமுயற்சிகளுக்குக் கிடைத்த நற்பரிசு. ஆயிரத்து தொழாயிரத்து எண்பத்து ஐந்தில் இவர் துவக்கிய பார்வையற்றோருக்கான அமைப்பின் மூலம் இன்றளவும் பயன்பெற்றோர் பல்லாயிரம்.
தற்போது இவர் ஆற்றியுள்ளதோர் அரிய சாதனை! தமிழ் நாட்டில் முதல் முதலாவதாகவும், இந்திய அளவில் இரண்டாவதாகவும் சாதனைப் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது. ஆம்! பார்வை அற்றவர்களுக்காக, பிரெய்லி முறையில் மாத இதழ் ஒன்றை வெளிக்கொணர்ந்துள்ளார். அதன் பெயரே அட்டகாசமாக உள்ளது. “விழிச்சவால்” விளம்பரஙள் தந்தும் உதவலாம். நமக்குத் தெரிந்த பார்வையற்றவர்களுக்கு நூறு ரூபாய் விலை கொடுத்து வாங்கி அன்பளிப்பாக வழங்கியும் அறிமுகப் படுத்தலாம். அல்லது தேவைபடுவோருக்குத் தெரியவும் படுத்தலாம்.
WWW.THEIAB.ORG
Sundararajanpatty, Azhagar Koil Main Road, Madurai - 625104, Tamil Nadu, India.
Cell : +91-9600822994, Phone : +91-452-3291576, Fax : +91-452-2470245, E-mail : iabmdu@gmail.com
Dr.A.Jeyaprakash - President S.M.A.Jinnah - Founder & Secretary General Dr.R.Surendranathan - த்ரியசுறேர்
Tuesday, August 2, 2011
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல பகிர்வு!
ReplyDelete