Sunday, August 14, 2011

செய்கூலி சேதாரம் வகையில் ஆண்டுக்கு 30ஆயிரம் கோடிகள் கொள்ளை!

ஒரு பவுன் தங்கத்தின் விலை இருபதாயிரம் ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தச் சூழலில் தஙக நகைகள் விற்பனையில் செய்யும் மோசடி குறித்த தகவலை இந்தவார மீடியா வாய்ஸ் ( ஆர்.சரத்குமார், சிறப்பாசிரியர்) பகிரங்கப்படுத்தியுள்ளது.

தஙகத்தில் செம்பு கலந்து மோசடி செய்வதாக எழுந்த குற்றச்சாட்டைப் போக்கிட அரசு, தரமான தஙகத்திற்கு ஹால்மார்க் முத்திரை வழங்கத் துவங்கியது. சுத்தமான24காரட் நகைக்கு 1000காரட் எனவும், 22காரட் நகைக்கு916எனவும் தரப்படுத்தி முத்திரை வழங்கியது. கலப்படத்தில் கோடிகள் லாபம் பார்த்தவர்கள் கண்டுபிடித்த தந்திரமே ”சேதாரம்” என்னும் குறுக்கு வழி. தற்போது சேதாரத்தின் அளவு 20சதவிகித்தத்திற்குமேல் கணக்கிடப்படுகின்றது. சேதாரத்தில் தங்கம் வீணாவதே இல்லை என்பதே உண்மை. நகை செய்யும்போது ஏற்படுகின்ற துகள்களையும், பொடிகளையும் மீண்டும் ஒன்று சேர்த்து தஙகமாக மாற்றி விடலாம். இவ்வாறாக சேதாரம் என்பது மிக மிகக் குறைவாகவே இருக்கும்.

அண்மையில் ஒரு நகைக்கடை விளம்பரத்தில், 10ஆ இருந்தா ஒத்துக்காதீங்க;1முதல்9சதவிகிதம் மட்டுமே சேதாரம் என்று விளம்பரம் செய்ததை நாம் எல்லோரும் படித்திருப்போம். மேலும், நகை வாங்கும்பொழுது நகைக் கடை வேலைபார்க்கும் நபர் துண்டுச்சீட்டில், தஙத்தின் எடையையும் விலையையும் குறித்து முதலாளிக்கு அனுப்புவார். அடிக்கடி வரும் நபர் அல்லது பேச்சு சாமர்த்தியம் உள்ள நபர் என்றால் நகையின் விலை மேலும் குறைக்கப்படும். பழைய நகைகளைக்கொடுத்து புதிய நகைகள் வாங்குவதிலும் கூட ...........

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார்500டன்நகைகள் செய்யப்படுகின்றன. இதில் 10சதவிகிதம் சேதாரம் என்று எடுத்துக் கொண்டால்கூட,50டன்கள் சேதாரம் கிடைக்கின்றது. ஒரு கிராம் தங்கம்2000ம் ரூபாய் என்று கணக்கிட்டால் 50டன் தங்கத்திற்கு 10000கோடிகள் வருகின்றது. இறக்குமதி செய்யப்பட்ட புதிய தஙத்தின் கதை இது.

இன்றைக்குப் புது நகைகள் செய்யப்படுவதில் பாதிக்குப்பாதி பழைய நகைகள் என்பது கணக்கீடு. இவ்வகையில் சேதாரம்10000கோடி.

கற்கள் பதித்த நகைகளில் கற்களின் எடைக்கு எடை விலையில் தள்ளுபடி செய்யப் படவேண்டும்.இவ்வகையில்10000ம் கோடி.

ஆக ஆண்டொன்றிற்கு30000ம் கோடி ரூபாய் பொதுமக்களிடமிருந்து சுரண்டப்பட்டு முதலாளிகளின் கைகளுக்குப் போய்ச் சேருகின்றது.

தெருவெல்லாம் வைரம் என்றொரு கட்டுரையை முதல் இதழில் வெளியிட்டுப் பலரின் பாராட்டைப் பெற்ற மீடியா வாய்ஸ் இரண்டாம் வாரம் தஙக நகைகள் விற்பனையில் அடிக்கும் கொள்ளையை அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த உண்மையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லியிருப்பவர், கன்ஸ்ட்ருமா கன்சல்டன்சி நிறுவனத்தை சேர்ந்த சீனிவாசன் ஆவார். இவர் ஒரு பொறியாளர் என்பது வியப்பிற்குரிய தகவல்.

பத்திரிக்கையாளர் மரக்காணம் பாலா வித்தியாசமான தகவல்களை எல்லாம் திரட்டித் தந்து கொண்டிருக்கின்றார். அவரது பணி தொடரட்டும். தன்னைப் பொது இடங்களில் வெளிப்படுத்திக் கொள்ளாதிருப்பதே அவருக்குப் பாதுகாப்பு. பொதுமக்கள் பாலா யார் என்று தேடப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. 57900923767341169458579009237673411694585790092376734116945857900923767341169458

2 comments:

  1. எந்த வியாபார தொழிலிலும் நேர்மை இருப்பது அவசியம். இப்படி 'சேதாரம்; செய்கூலி' என்று உலகமகா கொள்ளை நமது நாட்டில் தான் மிக மும்முரமாக நடக்கிறது. இந்த கொள்ளைகாரர்களின் வீட்டின் நிலைமையை கவனித்தால் ..... பிள்ளைக்கு காலோ, கையோ விளங்காமல் இருக்கும் அல்லது லூசாக இருப்பார்கள்; மனைவி மலடியாக இருப்பாள் அல்லது இவனுக்கே ஆண்மை இல்லாமல் இருக்கும். இது போன்ற பலதரப்பட்ட கொடுமைகளை இறைவன் இவர்களுக்கு வாரி வழங்கி இருப்பான். கடைசியாக, ஒரு நேரத்தில், எல்லாவற்றையும் இழந்து பிச்சை எடுக்கும் நிலைக்கும் வந்து விடுவார்கள்.

    ReplyDelete
  2. பெட்ரோல் பஙுகுகளைப் போன்று தஙக-வெள்ளி நகைக்கடைகள் சிறிதும் பெரிதுமாக பெரு-சிறு நகரங்கள், நகர்ப் புறங்களில் திறக்கப் படுவதன் காரணங்கள் இபொழுதுதானே தெரிய வந்துள்ளன..

    ReplyDelete

Kindly post a comment.