சுதந்திரத்தைப் பதுக்கி வைத்துள்ள எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும்!
”சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ள காந்தியவாதிகள், அவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் சரி. ’ எங்களுக்கு 15ஆயிரம் ரூபாய்க்குமேல் சம்பளம் வேண்டாம்’ என்று சொல்லட்டும். என்னைப் பொறுத்தவரை சுதந்திரம் பெற்று விட்டோம். வாங்கிய சுதந்திரத்தை எம்.எல்.ஏக்களும் பதுக்கி வைத்திருக்கிறார்கள். அவர்கள் பதுக்கிய சுதந்திரத்தைப் பெறுவதே இரண்டாம் சுதந்திரப் போராட்டம் என்று கருதுகின்றேன்.
வாரிசு அரசியலை ஒழித்து, எளிமையானவர்களையும், நேர்மையானவர்களையும் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களாக்கி தேசத்தில் புதிய ஒளி பிறக்கச் செய்வதே எனது பார்வையில் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்.
அக்கிரமும் அநியாயமும் ஒழிவதுதான் இரண்டாவது சுதந்திரப் போராட்டமாக இருக்கும். லெனின், மாசேதுங், டிட்டோ ஆகிய தலைவர்கள் தமது தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடி, வெற்றி பெற்று அரசியல் பதவிக்கு வந்தார்கள். ஆனால் தேசத் தந்தை மகாத்மா காந்தி இந்திய தேசத்திற்கான விடுதலையைப் பெற்றுத் தந்துவிட்டு அரசியல் பதவியே வேண்டாம் என்றார்.
ஆனால் இன்றோ சேவை மனப்பான்மை இல்லாத, ஒழுங்கீனமான, வன்முறையாளர்கள்தான் தேர்தலில் நின்று பதவிக்கு வருகிறார்கள். ’இத்தனை கிரிமினல்கள் தேர்தலில் நிற்கிறார்கள்’ என்று தேர்தல் ஆணையமே சொல்வதுதான் வேதனை.
ராஜேந்திர பிரசாத் தனது கிராமத்தில் மகாத்மா காந்திக்கு விழா எடுத்தார். மக்களும் மனமுவந்து அதற்குப் பணம் தந்தனர். மிகவும் குறைவான செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா அது. ஆனால், ‘மக்களுக்காகத்தான் நாம் இருக்கிறோம். நீங்கள் எனக்காக மக்களிடம் வசூல் செய்து ஏன் விழா எடுக்க வேண்டும்.’ என்ற மகாத்மா அந்த விழாவையே புறக்கணித்தார். ஆனால், தற்போது தனக்காக பாராட்டுவிழா நட்டத்தச் சொல்கிற அரசியல் பிரமுகர்கள்தான் நம் முன்னே நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.”
இவ்வளவு துணிச்சலுடன் கருத்தினைக் கூறியுள்ளவர், மேதகு. நெல்லை கண்ணன் அவர்கள். அவரைப் பற்றிய அறிமுகம் தேவை இல்லை. தமிழக அரசியலில் ஒரு சிறிதேனும் ஆர்வம் கொண்டவர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் நெல்லை கண்ணனைப் பற்றி அறியாமலிருக்க முடியாது. அவர் தினமணிக்காகத் தந்த பேட்டியினை அப்படியே தருவதில் பெருமகிழ்வு கொள்கிறேன். அவரது வலைப்பூ முகவரிஹ்ttp://thamizhkadal.blogspot.com/
சென்று படித்தால் நமக்கு லாபம். சொற்சுவை, பொருட்சுவை, பிழையற்ற தமிழ் எழுதிட உதவும்.
தினமணி கதிர்14-0௮-2011இதழ் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. பழ.நெடுமாறன், கி.ராஜநாராயணன், உ.வாசுகி, சி.மகேந்த்திரன். தமிழருவி மணியன், சோ, நெல்லை கண்ணன், அஜிதா, வானதி சீனிவாசன் ஆகியோர் அண்ணா ஹ்சாரே சொல்லும் இரண்டாவது சுதந்திரத்தைப் பற்றிய தங்களது கருத்தைப் பதிவு செய்துள்ளார்கள்.
என்.விவேகானந்தன், இனியன் சம்பத். கல்பனாதாசன் ஆகியோர், ஈ.வே.கி,சம்பத்தும் திராவிட இயக்கமும் என்ற கட்டுரைத் தொடரைத் துவக்கியுள்ளனர். தமிழக அரசியலின் பல உண்மைகளைத் தெரிந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் அவசியம் இந்தத் தொடரைப் படித்திடல் வேண்டும்.
கவிக்கோ ஞானச்செல்வன் எழுதிவரும் பிழை இன்றித் தமிழ் எழுதுவோம், பேசுவோம் ஐம்பத்திரண்டு வாரங்களைத் தொட்டுவிட்டது. தினமணி தமிழுக்குச் செய்யும் பெரிய தமிழ்ப் பணி இதுவாகும். இதனை மேலும் பலருக்குக் கொண்டு செல்வது தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட ஒவ்வொருவரின் கடமையாகும்.
இந்த வாரத்தில்,
ஜாமீன் -பிணை, நஷ்ட ஈடு - இழப்பீடு, (அன்னப்போஸ்ட்) போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுபவர் -எதிரிலி, குளறுபடி -குழறுபாடு ,
விளம்பரங்களில் வரும் தலைச்சுற்று என்பது பிழையானது. தலை சுற்று என்பதே சரி. விளையாட்டில் பல ரவுண்டுகள்-பல சுற்றுகள் என்பதில் வேண்டுமாயின் முதல் சுற்றைத் தலைச்சுற்று என்று கூறலாம். (தலை-முதல்) இப்படி இன்னும் சில.
தமிலிஷ் வழக்கமாகிவிட்ட நமக்கு இந்தப் பகுதி அவசியம் தேவைதான்.
தினமணிக்கு நன்றி சொல்வது நமது கடமை.
0 comments:
Post a Comment
Kindly post a comment.