என் குடும்பத்தில் எல்லோருமே வேறு ஜாதி பெண்களைத்தான் மணந்துள்ளோம். இத்தனை நாள் வாழ்க்கையில் எனக்கு ஜாதி பற்றிய சிந்தனையே வந்ததில்லை என்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார். ஜாதிவாரி இடஒதுக்கீடு பற்றிய சர்ச்சைகளை அலசும் புதிய படமான அரக்ஷன் என்ற படத்தில் அமிதாப் நடித்திருக்கிறார். அந்தத் திரைப்பட அறிமுகவிழாவில் அமிதாப் பேசியதாவது:
என் தந்தை ஜாதி, இனம், மாநிலம் எதையும் பார்க்காமல் திருமணம் செய்தவர். சின்ன வயதில் என்னைப் பள்ளியில் சேர்த்தபோது, என் ஜாதியைக் குறிப்பிடவில்லை. பச்சன் என்று குடும்பப் பெயரை மட்டும் அப்பா கொடுத்தார். அதையே பெருமையாக நினைக்கிறேன். பச்சன் என்பது அப்பாவின் செல்லப் பெயர். அவ்வளவுதான். நான் ஒரு பெங்காலியை (ஜெயா) திருமணம் செய்தேன். என் சகோதரன் அஜிதாப் ஒரு சிந்திப் பெண்ணை திருமணம் செய்தார். மகள் ஸ்வேதா பஞ்சாபி இளைஞனை திருமணம் செய்து கொண்டாள். என் மகன் ஒரு துளு பெண்ணை (ஐஸ்வர்யா ராய்) திருமணம் செய்துள்ளார்.
எனவே இத்தனை நாள் வாழ்ககையில் எனக்கு ஜாதி பற்றிய சிந்தனையே வந்ததில்லை. இவ்வாறு பேசிய அமிதாப், படத்தில் எல்லோரும் சமம்... எல்லோருக்கும் சமமான கல்வி வழங்க வேண்டும் என வலியுறுத்தும் ஒரு கல்லூரி முதல்வராக நடித்துள்ளாராம்.
இல்லாத ஏழை மாணவர்களுக்கு தனது செலவில் படிப்பு சொல்லித் தரும் கண்ணியமான வேடமாம் அமிதாப்புக்கு!.
Saturday, July 30, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.