Friday, July 22, 2011

இலங்கை ராணுவ அதிகாரிகள் குன்னூர் வருகை-

யாஹூவின் இன்றைய செய்தி. யாஹூ தினமலருடன் இணைந்து தமிழில் செய்திகளை ௬, ஜுலை, ௨0௧௧ முதல் வெளியிட்டு வருகின்றது.


குன்னூர்: குன்னூரில் உள்ள, ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு வந்துள்ள, இலங்கை ராணுவ அதிகாரிகள், குன்னூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களது வருகை, ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள, வெலிங்டன் எம்.ஆர்.சி., ராணுவ பயிற்சி மையம் அருகே ராணுவ பயிற்சிக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில், இந்தியா மட்டுமல்லாமல் பாகிஸ்தான், இலங்கை, ஜப்பான், சீனா என பல நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள், அவ்வப்போது வந்து சுழற்சி முறையில் பயிற்சி பெற்றுச் செல்வது வழக்கம். இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த, 25 முக்கிய ராணுவ அதிகாரிகள் நேற்று குன்னூர் வெலிங்டன் அருகே உள்ள தனியார் ஓட்டலில் ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், ராணுவ பயிற்சிக் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளதாக கூறப்படுகிறது. என்ன நிகழ்ச்சி என்பது போன்ற விவரங்களை தெரிவிக்க, அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இவர்கள் தங்கியுள்ள ஓட்டலைச் சுற்றி, 20க்கும் மேற்பட்ட போலீசார் "மப்டி'யில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வருகை குறித்து செய்தி சேகரிப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் ஓட்டல் நிர்வாகம் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

தின மலர்-யாஹூவில் வந்துள்ள இந்த செய்தி பழ.நெடுமாறன், வை.கோ., தா.பாண்டியன், சீமான் மற்றும் தமிழக அரசுக்குத் தெரியாத ரகசியமாகவா இருக்கும்?

0 comments:

Post a Comment

Kindly post a comment.