இந்திய மக்களில் பெரும்பான்மையோர் பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை உடையவர்கள். வாக்களிப்பதை ஓர் கடமையாகக் கருதி ஏதேனும் ஒரு பார்முலா அடிப்படையில் தொடர்ந்து பொதுத் தேர்தல்களில் வாக்களித்து வருபவர்கள். கொள்கையற்றுப்போன கூட்டணிக் கோட்பாடுகளால் குழம்பிப் போய் வாக்களிப்பதைத் தற்காலிகமாகக் குறைத்துக்/ நிறுத்திக் கொண்டவர்கள். ஆனால், அவர்களுக்கு ஜனநாயகத்தின் மீது உள்ள நம்பிக்கை இன்னும் முழுவதுமாக இற்றுப்போய்விடவில்லை.
அதேபோன்று நீதிமன்றங்களின் மீதுள்ள நம்பிக்கைகளும் கொஞ்சம் தொடர்கின்றன. ஜனநாயகம் மற்றும் நீதிமன்றங்களின் மீது மக்ககள் வைத்துள்ள நம்பிக்கை முழுவதும் பொய்த்துப் போகும் முன்பாக நல்லதோர் தீர்ப்ப்பினைக் காலச்சக்கரம் கொண்டுவரும் என்று நம்புவோமாக! வலைப்பதிவரால் வேறு என்ன செய்ய இயலும்.?
"கறுப்புப் பணம் போட்டுள்ளவர்களின் பட்டியல் விபரத்தை வெளியிட முடியாது. பட்டியலைப் பெற்ற நாடுகளிடமிருந்து , பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயர்களை வெளியிடமாட்டோம் என்ற உத்தரவாதத்தின்பேரில்தான் பட்டியலை அரசு பெற்றுள்ளது. எனவே ஒப்பந்தங்களை மீறும் வகையில் செயல்பட முடியாது " என்கிறார் பிரதமர்.
எதிர்காலத்தில் அந்த நாடுகளிடமிருந்து எந்தவிதமான தகவலையும் பெற முடியாது என்ற விளக்கத்தையும் அரசு தருகின்றது. மேற்படிப் பணத்திற்கான வரிதனை வசூல்செய்யும் என்றும் கூறியுள்ளது.
கறுப்புப் பணம் வத்துள்ளோர் பட்டியலை வெளியிட அரசு மறுப்பதை நமது நாட்டின் உச்ச நீதி மன்றம் கடுமையாகக் குறை கூறியுள்ளது.
நாட்டின் வளத்தைச் சூறையாடிய சம்பவத்தைக் கண்டுகொள்ளாமல் இருபது எப்படி என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருப்பது குறிபிடத்தக்கது.
இந்திய அரசாங்கம், கறுப்புப் பணப் பட்டியலில் இடம்பெற்றவர்களிடம்
நிச்சயமாக வரிவசூல் செய்யும். வட்டி அபராதங்களுடன்! வரி செலுத்த மறுத்தால் இந்தியாவில் உள்ள அவர்களது சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் வங்கிக் கணக்குகளை முடக்கும். இதற்கு அந்நிய நாடுகளுடன் போட்டுள்ள ஒப்பந்தம் தடையாக இருக்காது என்று நிச்சயமாக எதிர்பார்ப்போம்.
ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கின்றோம். எனவே, தூக்குத் தண்டனையாகத் தீர்ப்பு வழங்கப்பட்டாலும் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து குற்றவாளியைப் பாதுகாப்போம்.
சதுரமைல் நிலப்பகுதி அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்தாலும் அவர்களாகத் தந்துவிடுவார்கள் என்று பொறுமையாய்க் காத்திருப்போம்.
அடைக்கலம் என்று வந்துவிட்டால் எத்தனை செலவானாலும் பாதுகாப்புத்தரத் தயங்கமாட்டோம்.(தலாய்லாமா)
மாநிலங்களுக்கிடையே உள்ள நதி நீர்ப்பிரச்சினைக்குத் தீர்வு காண இயலாது, மாநிலக் கட்சிகளும், தேசியக் கட்சிகளும் குறிக்கோள் வோட்டு மட்டும்தான்!
கறுப்புப் பண விவகாரத்தில் உச்சநீதிமன்றமே அதிருப்தி தெரிவித்து உள்ளது. கடுமையான அதிருப்தி தெரிவித்துள்ளது. இது சாதாரண விஷயமல்ல.
காலந்தாழ்த்தியேனும் நியாயமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புவோம்.
தாமதப்படுத்தும் நீதி மறுக்கப்படும்நீதி என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகின்றது.
ஆனால் , நமது நாட்டின் பிரதம மந்திரியையும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் நாம் நம்பித்தானே ஆகவேண்டும்.
Friday, January 21, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.