Friday, January 21, 2011

பூந்தமல்லியில் வாங்கிய மாத இதழ், பிருதவி!

சிந்திக்கத் தெரிந்த மனிதமனம் பத்திரிக்கை நடத்த ஆசைப்படுகின்றது. ஆசைப்படும் அனைவருமே பத்திரிக்கை நடத்திவிடுவதில்லை. பத்திரிக்கை நடத்தும் ஆரம்பிக்கும் அனைவருமே வெற்றியும் பெற்று விடுவதில்லை. வெற்றிபெறும் பத்திரிக்கைகள் அனைத்துமே சிறந்தவை என்றும் கூறிவிட முடியாது.

நேற்று, ௨௧,ஜனவரி, ௨0௧௧, வெள்ளியன்று, ஸ்ரீபெரும்புதூர் செல்லும்போது , பூந்தமல்லியில் பார்வையில் பட்டது, பிருதுவி, மாத இதழ். விலை ரூபாய் ௧0/- ஆண்டு சந்தா ரூபாய் ௧00/-

முன் அட்டையில் இடம்பெற்ற செய்திகளால் அதனை வாங்கினேன்.

கடைசி நிமிடங்கள். பதவிப் பசியில் நவநீதம் பிள்ளை. முறியும் தொழில் உறவுகள் இந்திய அரசாங்கம் யாருக்க்காக? கருணாநிதி... சிங்கிள் டீ வடை.

இத்துடன் இடதுபுறம் நவநீதம் பிள்ளை, வலப்புறம் தூக்குக்கயிறு மாட்டப்பட்ட சதாம் சிறிய படங்கள்.

அதற்குக் கீழே, இடதுபுறம் ஜெயலலிதா..வலதுபுறம் கருணாநிதி முகம் மட்டும் உடைய படங்கள் சற்றுப் பெரிதாக.

தலைப்பில்: மலர்-௧ ஜனவரி-௨0௧௧ இதழ் ௬.

பின்புற அட்டையில் வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் ஆதரவு வழங்கும் வாசகர்களுக்கு நன்றி சொல்லும் ஆசிரியர், கே.செந்தில்குமார் முகப்ப்டம்!

அட்டை இல்லாமல் ௩௨ பக்கங்கள்.

வெளிப்புற-உட்புற அட்டையுடன் சேர்த்து நான்கு முழுப்பக்க விளம்பரங்கள்.


௧.மூடி மறைக்க்கப்படும் விசாரணைகள்- அலைக்கற்றை விவகாரம் தலையங்கம்.

௨,௩,௪;- இந்திய அரசாங்கம் யாருக்காக உதகை மு.வீரையன் எழுதிய க்ட்டுரை. மீனவர் பிரச்சினை.

௫.பக்கம்:- பதவிப் பசியில் நவநீதம் பிள்ளை . ஐய்க்கிய நாடுக்லள் சபையின் மனித உரிமைகள் ஆனையர் தலைவர்.

௮,௯,௧௯,;- முதலமைச்சர்கள் அன்றும் இன்றும் திண்டிவனம் ராமமூர்த்தி எழுதிய கட்டுரை. பதவி நீட்டிப்புக்காக இலங்கைப் பிரச்சினையிலும் மௌனம் காக்கும் அவலம். சுட்டப்பட்டுள்ளது. ஐ.நா.பொதுச் செயலர் பதவியில் உள்ள பான்கீமுனும் நவநீத பிள்ளையும் பதவிப்பித்தர்கள் என்பதே கட்டுரையின் வெளிப்பாடு.

௧௨,௧௩:- நன்றி மறபது நன்றன்று-ஆர்.நடராஜ் கட்டுரை-அருமையான கட்டுரை

௧௬,௧௭:- கோலிவுட்டுக்குள் புயலாக நுழையும் அஞ்சலி ௫ வண்ணப் படங்கள்

௨0,௨௧;- தீ-பட்டினி-சாவு--தீ-
காஞ்சிபுரம் பட்டினிச்சாவு செய்தியும்- அது குறித்து இணையதளத்தில் ௧௮-பேர்,
இந்தியா மற்றும் அஜ்மான், சிங்கப்பூர், துபாய், கத்தார், நாடுகளிலிருப்போர் பிரதிபலித்த கருத்துக்கள்.

௨௨,௨௩;- ஒன்றுமே அறியாதவர் நித்தியானந்தா தீபம் தே.அரவிந்த் கட்டுரை.

௨௪,௨௫;- அதிர்ச்சியூட்டும் போர்க்குற்றங்கள் கட்டுரை . இலங்கை விவகாரம்தான்.

௨௬,௨௭:- மெல்லத்தமிழ் வாழ-- வை இராமச்சந்திரன் கட்டுரை. தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்திய செம்மொழி மாநாடு குறித்தகட்டுரை.

௨௮,௨௯,;-கருணாநிதி..ஜெயலலிதா1 சிங்கிள் டீ ரெண்டு வடை கட்டுரை

௩0, ௩௧:- இன்றைய நாடாளுமன்றத்தின் நிலை கட்டுரை

௩௨:- சதாம் உசேனின் கடைசி நிமிடங்கள் கட்டுரை

பத்து ரூபாய் விலையில், ௩௬, பக்கங்களில், பாரட்டத்தக்க விதத்தில், தேர்ந்தெடுத்த கருத்துக்களில், தெளிவான சிந்தனையுடன் கூடிய கருத்துக்கள்!

ஆசிரியர் கே.செந்தில் குமாரது தன்னம்பிக்கையும், அனுபவத் தெளிவும் நல்ல மாத இதழ் என்ற எண்ணத்தை வலுபடுத்தியுள்ளது.

இவருக்கு எந்தக் கட்சியாவது எம்.எல்.ஏ. சீட் வழங்கினால் அது கட்சிக்குப் பெருமை சேர்க்கும்.

தன் சுய உழைப்பையும், தகுதியையும் நம்பித் துணிச்சலாகத்திட்டமிட்டால் இவர்க்கு வெற்றி நிச்சயம்!!!

இவரது வீரத் திருமுகம் சொல்லும் செய்தி இது!!!

எனக்கு இவரைப்பற்றி எதுவுமே தெரியாது என்பதும் ஒரு தகவல்.

நியூ நோ: ௧௨, கணபதி நகர், ஆர்க்காட் ரோடு, போரூர், சென்னை-௧0௬.

0௪௪-௩௨௪௫௪௮௬௬. ஈமெயில்:- பிருதுவி௨௦௰@ஜிமெயில்.கம

வெல்லட்டும் நல்ல உள்ளம்!

0 comments:

Post a Comment

Kindly post a comment.