Friday, January 21, 2011

தமிழ் விக்கிபீடியா பத்தாவது ஆண்டு விழா!




பஸ் என்ற சொல்லுக்குத் தமிழ் வார்த்தையினைத் தேடுவதைவிட, பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் பஸ் என்று அழைக்கப்படுவதையே தமிழறிந்தோர் நெஞ்சில் நிலைத்து வாழும் டாக்டர்.மு.வரதராசனார் ஆதரித்தார்.

தனித்தமிழ் இயக்கத்தை முதலில் ஆதரித்தார்., ஜீவானந்தம். யார் தனித்தமிழுக்காக இயக்கம் கண்டாரோ அவரே வீட்டில் போஸ்ட் மேன் என்ற சொல்லைப் பயன்படுத்தியதை நேரிற் கண்ட ஜீவா, பின்னர் தன் கொள்கையை மாற்றிக் கொண்டார்.

விக்கிபீடியா என்ற சொல் தமிழாக்கம் செய்யப்படவில்லை. விக்கிபீடியா பதிவர்களை விக்கியர் என்றே அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால், சில இடங்களில் பயனர் என்றும் குறிபிடுகின்றனர். ஆனால் விக்கிபீய்டியா எழுதுபவர் எபடிப் யனர் ஆவர் என்பதே எனது ஐயம். விக்கிபீடியாவாலபயன்பெறுவோரையே பயனர் எனலாம். விக்கி பீடியா எழுதுவோரை, விக்கிபீடியாப் பதிவர் என்றே அழைக்கலாம்.

விக்கி பீடியா தமிழில் ஆரம்பாகி பத்து ஆண்டுகள் ஆனமைக்காகான விழா ௧௫,ஜனவரி,௨0௧௧-ல் சென்னையில் நடந்தது. மிட் -என்ற சென்னை கிண்டியில் நடந்த இடம்;-ல் MADRAS INSTITUE OF TECHNOLOGIES.

அய்க்கிய அரபு அமீரகம் இ.மயூரநாதன், தமிழ் விக்கி பீடியாவின் முதல் பதிவர். ப்ங்கேற்றது சிறப்பான செயல். சென்னை இயற்பியல் ஆசிரியர் சுவாமிநாதன் (பரிதிமதி ) விழா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். சூர்ய பிரகாஷ், பொதுவன் அய்யா, மாஹிந், மற்றும் பலர் கலந்து கொண்டனர். விக்கிபீடியாவில் வேறு விபரங்கள் இல்லை.

மாதம் இருமுறை பதிவேற்றப்படும் முத்து கமலம் இணைய இதழின் ஆசிரியர் தேனி சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிபீடியா புத்தகத்தை, கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி ஷேஷாத்ரி வெளியிட்டார். முதல் பிரதியை சுகதேவ், இரண்டாம் பிரதியை இமாம் கவுஸ் மொகைதீன் பெற்றுக் கொண்டனர். சென்னையில் வசித்தும் தகவல் தெரியாததால் கலந்து கொள்ளாதது எனக்கு இழப்பு.

௨00௯-ல் தேனி சுபிரமணியுடன் தொலைபேசியில் பேசியிருக்கின்றேன். சென்னைவாசியான நான், தொகுப்பாளர் பரிதிமதியைக் கண்டுபிடித்து மொபலில் தொடர்பு கொண்டு பேசியும்விட்டேன்.

தமிழ் விக்கிபீடியா குறித்த தகவல்கள் அனைத்தும் உள்ளடக்கமாகக் கொண்ட புத்தகம் வெளியான விபரத்திற்காகவே இந்தப் பதிவு.

மணிவாசகர் நூலக வெளியீடு. ௫௩, புதுத்தெரு, சிதம்பரம். ௬0௮00௧.
மற்றும், ௩௧, சிங்கர்தெரு, பாரி முனை,சென்னை.௬00௧0௧.

இரவி சங்கர் மேற்கண்ட புத்தகத்துடன், மேலும் இரு புத்தகங்களைத் தருமாறு கூறியுள்ளார். தமிழில் வெளிவந்துள்ள இணைய தளங்கள் பற்றிய புத்தகங்களைத் திரட்டிவருகின்றேன். த்கவல் தந்தால் நல்லது. நன்றி.

பாசிட்டிவ் அந்தோணிமுத்து நினவு மலரைவிடப் புத்தகம்மாக்கலே சரியானது, என்றார், பத்திரிக்கையாளர், ஞாநி. கட்டுரையும் கேட்டுள்ளேன். அவகாசம் ஒரு மாதம். தலைப்பு மாற்றுத் திறனாளர் பற்றியது.

புத்தகம் 2011ஆகஸ்டில் வெளிவரும்.
!

4 comments:

  1. பயனர்/பதிவர் பற்றி.

    இது போல கருத்துகள் ஆங்கில விக்கியிலும் உண்டு. அங்கு அனைவரும் editor என்று அழைக்கப்படுகிறோம். (If one has an account he is a wikipedian/editor)

    இங்கு அனைவரும் பயனர் என்று. யார் வேண்டுமேனுமாலும் தொகுக்ககலாம் என்றுள்ளதால் ”பதிவர்” என்று சொல்லி தனியே வேறுபடுத்திக் காட்டுவதில்லை. விக்கியர்களும் இந்த படிப்பவர்/எழுதுபவர் பாகுபாட்டை விரும்புவதில்லை யென்பதால், பயனர் என்றே குறிப்பிட வேண்டுமென்பது என் எண்ணம்

    ReplyDelete
  2. விக்கியைப் பொருத்தவரை எழுதுபவர்கள் அனைவரும் பயனர்களே, பயனர்கள் அனைவரும் எழுதுபவர்களே. அதுவே விக்கியின் பலம்.

    ReplyDelete
  3. //அய்க்கிய அரபு அமீரகம் இ.மயூரநாதன், தமிழ் விக்கி பீடியாவின் முதல் பதிவர். ப்ங்கேற்றது சிறப்பான செயல். //

    மயூரநாதன் எப்போது பங்கேற்றார்? நான் தான் சூர்ய பிரகாஷ். இப்பதிவு ஊகங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. அங்கு நடந்த நிகழ்வுகள் எதுவுமே இங்கு கூறப்படவில்லை.

    :(

    http://goo.gl/RoMyo

    ReplyDelete
  4. நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர் சொன்னதன் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள தமிழ் விக்கிபீடியாவைப் பின்பற்றியே எழுதினேன். தொகுப்பாளருடன் கலந்துரையாடும் வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை. அதன்பின்னர் தவறிருந்தால் திருத்திக் கொள்ளப்படும்.

    ReplyDelete

Kindly post a comment.