Thursday, January 20, 2011

பெட்ரோலுக்கு ரேஷன் கொண்டுவாருங்கள்


இலவசங்களை அள்ளித்தந்து வாக்குகளைப் பெற்று வெற்றி பெற கோட்டை கட்டுகிறது, தி.மு.க.

வீட்டுக்கு ரேஷன் பொருள் வந்துசேரும் என்று சொல்லிவரும் விஜயகாந்த், இன்று ஏழைகளுக்குக் குறைந்த விலையில் பெட்ரோல் வழங்க வேண்டும் என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

ஏழை-பணக்காரனை எப்படிக் கண்டுபிடிப்பார், விஜயகாந்த்?

பெட்ரோலுக்கு ரேஷன் முறையைக் கொண்டு வரட்டும். ஏழெட்டுக் கார்களுடன் இளமைத் துள்ளல்களுக்கு ஊர்கோலம் போகும் பணக்கார மைனர்களின் காரோட்டங்கள் கட்டுக்குள் வரும். கறுப்பில் பெட்ரோல் வாங்கும் நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்படும். கறுப்புப் பணம் ஏழைகளுக்குப் போய்ச் சேர வாய்ப்பு ஏற்படக் கூடும்.

ஆட்டோ ஓட்டுநர்களும், மாதச் சம்பளம் வாங்குவோர்களது பெட்ரோல் , பணக்காரர்களால் விலை பேசப்படும். பிழைக்க வழி தெரிந்தோர் பிழைத்துப் போகட்டுமே!

சரிதானே வலைப்பூ நண்பர்களே?

1 comments:

  1. சரிதான் தவரான பாதையுலும் ஏழை வாழ்வான்

    ReplyDelete

Kindly post a comment.