Thursday, January 20, 2011

இலக்கியப்பணியில் யுகமாயினியுடன் கைகோர்த்துள்ள தினமணி!

சென்னை நகர வாழ்க்கை நரக வாழ்க்கை ஆகிப்போனது.

இருந்தாலும் சில நல்ல நிகழ்வுகள் நெஞ்சிற்கு இதமளிக்கின்றன.

ப.இலட்சுமணனின் இலக்கியச் சிந்தனை - பொன்னடியானின் கடற்கரைக்கவி அரங்கம், ஞாநியின் "கேணி" பாக்கியம் ராமசாமியின் "அக்கறை" கலந்துரையாடல்,

இந்த வரிசையில் இலக்கியப் பணியில், யுகமாயினி-தினமணி இணைத்து நடத்தும் மாதாந்திர இலக்கிய நிகழ்ச்சி, "மனம் விட்டுப் பேசுவோம்"

21-01-2011- நாளை வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு, கே.கே.நகர். மஹாவீர் வளாகத்தில் நிகழவிருக்கின்றது.

"இவர்கள் ஏன், எதற்காக எழுதுகிறார்கள்" என்பது தலைப்பு. கலந்துரையாடல் நிகழ்ச்சி என்பது இதன் சிறப்பு. இலக்கிய விமர்சகர் இந்திரன், தேவ கோட்டை வா. மூர்த்தி, மு.மேத்தா, எம்.ஜி. சுரேஷ், ப.லட்சுமணன் கலந்துரையாடுகின்றனர்.

யுகமாயினி ஆசிரியர் சித்தன் நிகழ்ச்சியின் ஒருங்கிணப்பாளர். இன்றைய தினமணி தரும் தகவல் இது.

இதுபோன்ற நிகழ்வுகள் ஒரே இடத்தில் தொடர்ந்து நடத்தாமல், சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் மாதத்திற்கொரு இடத்தில் நடத்துதல் நலம் பயக்கும். என்ன எழுத வேண்டும் என்று சொல்ல, பார்வையாளர்களுக்கு வாய்பளிக்கப்படுமா என்று தெரியவில்லை.

0 comments:

Post a Comment

Kindly post a comment.