எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சுற்றுலாத்துறை அமைச்சராக்கப்படவேண்டியவர்- கலைமகள் புதல்வன்- தமிழ்நாடு விற்பனைக்கு ! விலை ரூபாய் நூறு!
குற்றால அருவி பலருக்குத் தெரியும். குற்றாலம் சென்றிருந்தால், பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலி அருவி, ஐந்தருவி, தேனருவி, செண்பகாதேவி அருவி, பழத்தோட்ட அருவிகளும் தெரிந்திருக்கும்.(குத்தாலம் தஞ்சையில் உள்ளது. அங்கு அருவி எதுவும் கிடையாது.)
பின்வரும் அருவிகளும் தமிழ்நாட்டில்தான் உள்ளன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
உலக்கை அருவி, திற்பரப்பு அருவி, காங்க்ரீவ் அருவி, அதிரம் பிள்ளை அருவி, பிர்லா அருவி, வெட்டு மருவு அருவி, தலையாறு அருவி, சுருளி அருவி, பம்பர் அருவி, ஃபேரி அருவி, வெள்ளி அருவி, கும்பருட்டி அருவி, ஆகாச கங்கை அருவி, கல்லட்டி அருவி, காட்டேரி அருவி, லாஸ் அருவி, மோயர் அருவி, குட்லாம் பட்டி அருவி, அய்யனார் அருவி, கிள்ளியூர் அருவி, குரங்கு அருவி, ஜலகம்பாறை அருவி இவை எல்லாம் தமிழ்நாட்டில்தான் உள்ளன. எங்கெங்கு உள்ளன என்பதைத் தெரிந்துகொள்ள ரூபாய் நூறு செலவு செய்யத் தயாராய் இருக்க வேண்டும்.
கானாவெட்டி பறவைகள் சரணாலயம், இந்தியாவிலேயே பெரியதும், மரக்கூழ் இல்லாமலேயே காகிதம் தாரிக்கும் ஆலை உள்ள இடம், மாத்தூர் தொங்கு பாலம், விந்தையான பேவாட்ச் தீம் பார்க், இந்தியாவின் முதல் மெழுகு அருங்காட்சி அகம், சகுந்தலா பாரம்பரிய அருங்காட்சியகம், வட்ட வடிவில் அமைந்துள்ள 855 ஆண் பெண் போர்வீரர்கள் நினைவுக் கல்லறை, மாம்பழத் திருவிழா, கூழாங்கல் ஆறு, கீழ்நீரார் அணை, நம்பர் பாறை, புலிப் பள்ளத்தாக்கு, புல் மலைகள், கரடிக்குகை, குருசடைத்தீவு, பிள்ளை இடுக்கி அம்மன், அவிலஞ்சி, மிதக்கும் பாறை, கின்னஸ் புக்கில் இடம்பெறவேண்டிய நூல் தோட்டம், ஊசிப்பாறை, குடிமியான் மலை, ரஞ்சங்க்குடிக் கோட்டை, அக்னி தீர்த்தம் -தமிழத்தில் உள்ள இவற்றைப்பற்றி எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் நீங்கள் ரூபாய் நூறு செலவழித்திடல் வேண்டும்.
1639-1947 காலக் கட்டத்தில் தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகளை இர்ண்டே பக்கங்களில் ஒற்றைவரிக் கவிதையாகத் தந்துள்ள சிறப்பிற்கே இதன் ஆசிரியர் கலைமாமணி வி.கே.டி.பாலன் அவர்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம்.
எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தாலோ அல்லது வசதி இருந்தாலோ உடனுழைத்திட்ட 45-க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு ஆளுக்கொரு வீடு அவரவர் விரும்பும் இடத்தில் கிடைக்கச் செய்வேன். ஆசிரியரை சுற்றுலாத்துறை அமைச்சராக்குவேன்.
குக்கிராமத்தில் பிறந்து, போதிய பள்ளிக் கல்வி அற்ற நிலையிலும், ந்வீனத் தொழில் நுட்பங்கள் அனைத்தையும் பயன்படுத்தி சில நூறு குடும்பங்களை வாழவைத்துக்கொண்டிருக்கும் இந்நூல் ஆசிரியர் எனது நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கின்றேன். சீனியர் சிட்டிசனாகப்போகும் இந்தவயதிலும் ஆர்வத்தில் மடிக்கணினியை இயக்குமளவிற்குத் தன் திறமையை வளர்த்துக் கொண்டுள்ள அவரது பேராற்றல் எனக்கு வியப்பூட்டுகின்றது.
560 ப்க்கங்களில் தமிழகத்தை நம்மிடம் கொண்டுவந்துள்ளார். கலை,இலக்கியம்,பண்பாடு, அனைத்துமதக் கோவில்கள், முக்கியமான இடங்கள், கோவில்,சுற்றுலா அலுவலகத் தொடர்புத் தொலைபேசி எண்கள் ...என இந்தப் புத்தகத்தில் இல்லாத த்கவல்களே இல்லை என்னும் அளவிற்குச் சிறப்பாக கருப்பு-வெள்ளை வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம் தமிழ் படிக்கத் தெரிந்தோர் வீட்டின் வரவேற்பறையில் இடம்பெறவேண்டியது அவசியம்.
மதுரா வெளியீடு, மதுரா டிராவல்ஸ், 113-காந்தி இர்வின் சாலை, எழும்பூர், சென்னை-600008. விலை ரூபாய் 100/-
வெளியீட்டாளருக்கு ஓர் வேண்டுகோள்.
முன்வெளியீட்டுத்திட்டத்தில் இதே விலைக்கு வண்ணப்படைப்பாக்கலாம். மாணாக்கர்களுக்குச் சலுகைவிலையில் கிடைத்திட ஏற்பாடு செய்யலாம். ஔவையாரின் ஆத்திசூடியை பக்கத்திற்கொன்றாக இடம்பெறச் செய்யலாம்.
போனஸ் செய்தி:-
9 கொலைகளச் செய்ததால் ஜெயப்பிரகாஷ் ஆயுள்/தூக்குத் தண்டனை பெற்று விடுதலையான கைதியின் இன்றைய நிலை என்ன? இவரது உதவியால் PCO-உரிமையாளரானான். திருமணமும் நடந்தது. வாரிசுகள் உயர்கல்விகற்றுப் பொறியாளராகியுள்ளனர்.
மாற்றுத் திறனாளிகள் பலர் இவரால் சுய கௌரவத்துடனும், தன்னம்பிக்கையுடனும், சுய உழைப்பில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். அண்மையில் திருநங்கை ஒருவரை ஊடகத்துறை விற்பன்னராக்கி உலாவரச் செய்துள்ளார்.
வி.கே.டி. பாலன்- கமல ஹாசனின் விருமாண்டியில் நடித்துள்ளார். தமிழில் முதன் முதலில் இணைய வானொலியைத் துவக்கியவர். தொடர்ந்தும் ந்டத்திவருபவர்.
மானுடப் பறவைகளின் வேடந்தாங்கலாகவும் இயங்குகின்றது இவரது எழும்பூர் அலுவலகம். திறமைசாலிகளுக்கு வழிகாட்டுகின்றார். மன ஊனமுற்றவர்களுக்கு இவர் ஓர் மனநல மருத்துவர். இவரைப் பார்த்தாலே போதும் பரவசமும் உற்சாகமும் பார்ப்பவரின் அணிகலங்களாகிவிடும். அறிமுகமற்ற புதியவர்களிடம் கூட பல்லாண்டுக்காலம் பழகிய உணர்வைத் தன் உரையாடல்கள் மூலம் ஏற்படச் செய்யும் சித்து வேலை இவருக்குக் கைவந்த கலை. எவரும் இவரை ஏமாற்றவும் முடியாது; எவரையும் ஏமாற்றவும் மாட்டார். TIME MANAGEMENT -இவரிடம் கற்றுக் கொள்ளவேண்டிய பாடம்.
கடந்த இரண்டாண்டு காலமாக ஆண்டுதோறும் தொண்டுளம் கொண்டு சிறப்பாக மக்கட்பணியாற்றும் அன்பர் ஒருவரைத் தெரிவு செய்து, மதுரா மாமனிதராக அறிவித்து, ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் அளித்து வருவது இவரது இன்னொரு நற்பணியாகும்.
இவரது வரலாறு தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனங்கள் தயாரிக்கும் புத்தகங்களில் இடம் பெற்றால் தமிழக மாணாக்கர்களின் வருங்காலம் வளமாக்கிடத் துணநிற்கும்.
வலைச்சரத்திலிருந்து வந்த கடிதம் வலைபதிவு நண்பர்களின் மேலான பார்வைக்காக.
அன்புடைய பதிவருக்கு வணக்கம்,
தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...
அன்புடன்,
வலைச்சரம் நிர்வாகம்.
January 19, 2011 10:25 PM
சீராசை சேதுபாலா said...
கரும்பு தின்னக் கூலியா? தாரளமாய் ! பாசிட்டிவ் அந்தோணி முத்து, பன்முகத் திறனாளி, நமது நினைவில் வாழ்பவர், சிறந்த வலைப்பூ பதிவாளர், காஞ்சிபுரம் ஏ.கே கன்சல்டன்ஸ் ஏ.கே.ஆர். வழிகாட்டுதலில் தயாராகி வருகின்றது. தாங்களும் இந்தப் பணியில் கைகோர்க்க வேண்டுகின்றேன். பயனுடைய வலைப்பூவினர் முகவரிகள் அதில் இடம்பெறும். நன்றி.
January 20, 2011 3:20 அம
பகிர்ந்தமைக்கு நன்றிகள், முக்கியமான பயனுள்ள தகவல்கள்
ReplyDelete