தமிழகத்தை ஆட்சிசெய்வோர், "தமிழகம் தன்னிறைவு பெற்றுவிட்டது. வேலை வாய்ப்பு பெருகியுள்ளது." என்று மேடைதோறும் முழங்குகின்றனர். அவ்வப்போது முழுப்பக்க விளம்பரங்கள் அனைத்து நாளேடுகளிலும். ஆட்சி மாற்றத்திற்காக ஊழலை எதிர்த்துப் போர்முரசு கொட்டும் கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிக்கைகளும்கூட வருவாய்க்காக அரசு தரும் எல்லா விளம்பரங்களையும் வெளியிடுகின்றன. மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவதில் பங்குபெற்றுத்தான் கட்சிப்பத்திரிக்கைகளை நடத்த வேண்டுமா?
தன்னிறைவு பெற்ற தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள ஏழைகள் எப்படி இருக்கமுடியும்? இலவசங்களை ஏன் வழங்கவேண்டும்? ஏழைகள் உள்ளவரை இலவசங்கள் தொடரும் என்ற உறுதிமொழிவேறு, வெட்கக்கேடு!
நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன்; கவிழ்ந்து விடமாட்டேன். நீங்கள் என்மீது ஏறிப் பயணம் செய்யலாம் என்ற விளம்பரம் தொடர்ந்து "டெலிவிஷப்பெட்டியில்" வந்து கொண்டுதானிருக்கின்றது.
அவரை நாம் ஏன் கடலில் தூக்கிப் போடவேண்டும்? அப்படியே போட்டாலும் நாம் பாதுகாப்பாக நிலப்பகுதியில்தானே இருப்போம். இவர் உடலாகிய கட்டுமரத்தின் மீது ஏறி ஏன் பயணம் செய்யவேண்டும்? அப்படியே பயணித்தாலும் அவர் உடல் எப்படித் துணைசெய்யும்? தமிழகத்தின் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் இவரது ஒரு உடல் மட்டும் எப்படிப் போதும்? எவருமே இந்த விளம்பரத்தை எதிர்த்துக் குரல் எழுப்பவில்லையே ஏன்?
2010-11 தமிழக அரசி ஆண்டு வருவாய் 45000/-ம் கோடி என்பது கணிப்பு. டாஸ்மாக் மூலம் எதிர்பார்ப்பது 15000/- கோடி. 30%-க்கும் மேல்!
அரசுக்குவரும் 15000 கோடி போக, பார் உரிமையாளர்களுக்கும், கள்ளச் சரக்கு விற்பவர்களுக்கும் 5000 முதல் 10000 கோடி வருமானம்.
லாபம் பார்க்கும் எல்லோரும் கட்சிக்காரர்கள், வட்டச் செயலாளர்கள், குட்டித்தலைவர்கள்,எம்.எல்.ஏக்கள். இவர்களைப் பிணந்தின்னும் கழுகுகளோடு ஒப்பிடலாம் என்று எண்ணினால், அதற்கும் வழியில்லை.
ஏனெனில், கழுகுகள் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கின்றன. நோய்கள் பரவாமல் தடுக்கின்றன. உடனிருந்தே கொல்லும் புற்று நோயோடு வேண்டுமானால் ஒப்பிட்டுக் கூறலாம்.
2008-ல் லோக் சபைத் தேர்தல் எனவே, இலவச பொங்கல் பை விநியோகம் 2009-ல் தேர்தல் எதுவும் இல்லை எனவே பொங்கல் பிச்சையும் இல்லை. 2011 சட்டசபைத் தேர்தல் வருகின்றது, எனவே மீண்டும் பொங்கல் பிச்சை. டாஸ்மாகில் நூற்றுக் கணக்கில் கொட்டித்தீர்க்கும் குடிமகனுக்கு அரை கிலோ அரிசி, அரை கிலோ வெல்லம், நூறு கிராம் பருப்பு வாங்க வக்கில்லாமலா போனான்?
தமிழக மக்களைக் கையேந்தும் பிச்சைக்காரர்களாகவும், குடிநோயாளிகளாகவும் ஆக்கிக் கொண்டிருக்கும் தமிழக அரசின் செயல்பாடுகளைக் கண்டும் காணாமல் இருப்போர் மீது கோபம் கொள்கின்றார், அறிஞர், சிராஜுல் ஹஸன். அண்மையில் சமரசம் இதழில் இடம் பெற்றுள்ள அவரது எழுத்தோவியம்.
மனித கண்ணியம் வேட்டி அவிழ்ந்து சாக்கடையோரம் செத்துக் கொண்டிருக்கிறது.இங்கே தமிழ்ச் சமுதாயத்தில் எந்தச் சலனமும் இல்லை.
அட, சொரணை கெட்ட தமிழனே, தமிழனே..!
ஏன் இப்படி மரத்துப் போனாய்? ஏன் இப்படிச் சோற்றால் அடித்த பிண்டமானாய்? எங்கே போயின உன் வீரமும் பண்பாடும்.
சிறுமை கண்டு துடித்தெழவேண்டிய உன்தடத்தோள் எங்கே?
சமூகச் தீமைகளைக் கண்டு சீறியெழ்வேண்டிய உன் சங்கநாதக்குரல் எங்கே? இபொழுதேனும் எழு. விழி.
உணர்ச்சிகொள். ரௌத்திரம் பழகு. சிறுமை கண்டு பொங்கு.
இல்லையேல், நாளைய வரலாறு உன் முகத்தில் காறித் துப்பும்.
உதவி:- பாடம், வளர்ச்சி அரசியலுக்கான மாத இதழ் ஆசிரியர் நாராயணன்(9840393581)
www.paadam.இன்
அன்புடைய பதிவருக்கு வணக்கம்,
ReplyDeleteதங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...
அன்புடன்,
வலைச்சரம் நிர்வாகம்.
கரும்பு தின்னக் கூலியா? தாரளமாய் ! பாசிட்டிவ் அந்தோணி முத்து, பன்முகத் திறனாளி, நமது நினைவில் வாழ்பவர், சிறந்த வலைப்பூ பதிவாளர், காஞ்சிபுரம் ஏ.கே கன்சல்டன்ஸ் ஏ.கே.ஆர். வழிகாட்டுதலில் தயாராகி வருகின்றது. தாங்களும் இந்தப் பணியில் கைகோர்க்க வேண்டுகின்றேன். ப்யனுடைய வலைப்பூவினர் முகவரிகள் அதில் இடம்பெறும். நன்றி.
ReplyDelete