திரு. நெ.து. சுந்தரவடிவேலு, தமிழறிந்தோர் நெஞ்சங்களிலெல்லாம் நிலைத்து வாழ்ந்துவரும் மாமனிதர்!
எல்லோரும் வாழ்வோம் !
நன்றாக வாழ்வோம் !!
ஒன்றாக வாழ்வோம் !!!
என்பதுதான் அவர் நமக்குத் தந்திட்ட தாரக மந்திரம். காமராஜரும், நெ.து.வும் சென்ற தலைமுறையினருக்கு அறிவுச்சுடர் ஏற்றுவித்த அணையாத தீபங்கள்.
அதன் சுருக்கமே,
இந்த வலைப்பூவின் முகப்பில்,
எல்லோரும், நன்றாக, ஒன்றாக வாழ்வோம்- என்பதாக,
இடம்பெற்றுள்ளது.
சாராயக் கடையிலும், டெலிவிஷத்திலும், வெள்ளித்திரை மாயையிலும் சிக்குண்டு சீரழியும் இளைஞர்கள் மத்தியில்,
கணினித் தொழில் நுட்ப வல்லுநர்களாகத் தம்மை வளர்த்துக் கொண்டதோடு,
மற்றவர்களையும் வல்லுநர்களாக்கி, தாய்த்தமிழ்மொழி மின்னிதழ் மூலம் தமிழ் வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்,
கூடல் மாநகர் மதுரையில், மூன்று தமிழ்ச் செல்வங்கள்!
அவர்களின் இணையதள அறிமுகம் இன்று கிடைத்தது எனக்குக் கிடைத்திட்ட கலங்கரை விளக்கம் என்றே கருதி மகிழ்கின்றேன்.
வலைப்பூ அன்பர்கள் நினைவில் வாழும் பன்முகத் திறனாளி, அந்தோணி முத்து நினைவு மலர்த் தயாரிப்புப் பணி நேற்று காஞ்சிபுரம் ஏ.கே.ஆர். மூலம் துவக்கப்பட்டுவிட்டது என்பதும் மகிழ்ச்சிக்குரிய செய்தி.
மேற்படி மலரில், ஆக்கப்பணியில் இணையத்தைப் பயன்படுத்துவோர் முகவரிகளை இடம்பெறச் செய்யும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றது.
எந்த நிறுவனத்திற்கு மாறினாலும் ஒரே மொபைல் நம்பரைத் தக்க வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
எந்திரனைப் போன்று செயல்படும் முழுமுதற் செயற்கை நுண்ணறிவு எந்திரன் உருவாகிவிட்டானா?
பிரபலமான இடங்களை இணையதளத்தில் பார்த்திட உதவும் தளம் எது?
(www.view360.இன்),
இன்னும் இதுபோன்ற பல வினாக்களுக்கான விடைகள்,
௫௯ வகையான மொழிகளை மொழிபெயர்க்கும் வசதிகளக்கொண்ட கூகிள் குறித்த தகவல்கள்,
ஆகியவற்றைக் கொண்ட
அறிவுக் களஞ்சியமாகத் திகழ்கின்றது, டெஹ்தமிழ்.காம்.
http://techtamil.in
http://techtamil.in/feed/ அன்புடன் TechTamil எடிடோர்ஸ்
பிறரது படைப்புக்களையும் வரவேற்கின்றனர், பேருவகையுடன்!!!
திரு. கார்த்திகேயன். Lead Editor ,
திரு. கிருஷ்ண குமார் Co-Editor in Tech News & PHP.திரு. புவனேஷ் குமார் Co-Editor in PhotoShop, Flash & all other designing tools.
அலுவலக முகவரிBlaze Web Services Private Limited,2nd Floor, St. John’s பேந்தர்,No: 21, North Vadambokki Street,Madurai, Tamil Nadu,India – 625 001.
தங்களின் படைப்புகளை அனுப்ப:தங்களின் படைப்புகளை editor@techtamil.com எனும் முகவரிக்கு அனுப்பவும். தங்களின் படைப்பு சார்ந்த படங்கள் மற்றும் தங்களைப் பற்றிய தகவல்களையும் அனுப்பி வைக்கவும்.
தங்களின் கேள்விகளை தமிழில்:ask@techtamil.கமஅனைத்தும் அறிவோம். அறிந்ததைச் சொல்வோம் சொல்வதைச் செய்வோம். மெய்யாகவே!!!
அறுபத்திரண்டு வயதில் ஒற்றைவிரல்கொண்டு தமிழில் வலையில் எழுதிடும் வாய்ப்புக்காரணமான அழகி விஸு, நேர்மறச்சிநதனைகளின் கிரியாஊக்கி அந்தோணிமுத்து, நண்பர் ஏ.கே.ஆர். பொள்ளாச்சி தமிழ்க்கனல் நசன், ராணி மைந்தன், பாக்கியம் ராமசாமி, வல்லமை இணைய இதழ் ஆசிரியர் அண்ணா கண்ணன், உற்சாகமூட்டிவரும் வலைச்சர ஆசிரியர் குழுவினர்
மற்றும், என் முயற்சிகளுக்கு நாளை நேசக்கரம் நீட்டப்போகின்ற மதுரையின் முத்தமிழ்ச் செல்வங்கள், ஐக்கிய அரபு இ.மயூரநாதன், (தமிழ் விக்கி பீடியாவின் முதல் பதிவர்) , அம்பத்தூர் இயற்பியல் ஆசிரியர் சுவாமிநாதன் இரவிசங்கர், ஆயிரக்கணக்கான நகைச்சுவைத் துணுக்குகள், நூற்றுக் கணக்கான கட்டுரைகளின் படைப்பாளி, தேனி சுப்பிரமணி இன்னோரன்ன அன்பர்கள் அனைவருக்கும் அநேக வணக்கங்கள் !
0 comments:
Post a Comment
Kindly post a comment.