"விரைவில் பதவி விலகுவேன்" என்று கருணாநிதி கூறியுள்ளார். உண்மையிலேயே தமிழக முதல்வர் பதவியிலிருந்து கருணாநிதி விலகினால் தமிழக மக்களின் பொற்காலம் ஆரம்பமாகிவிட்டதென்றே எடுத்துக் கொண்டு எல்லோருக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டாடலாம்.
அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோர் மேடையில் அமர்ந்திருக்க உலகத் தமிழினக் காவலர் பதவி விலகும் விருபத்தைத் தெரிவித்திருக்கின்றார்.
அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இல்லத் திருமணத்தின்போது திங்கட்கிழமை சென்னையில் திருவாய் மலர்ந்தருளியுள்ளார், கருணாநிதி.
சொல்வதைச் செய்வேன்; செய்வதைச் சொல்வேன் என்று அடிக்கடி முரசறிவித்துவரும் கலைஞர், இந்த முறையேனும் வார்த்தைதவறமாட்டார் என்று எதிர்பார்ப்போம்.
கட்சித்தலைவர் பதவியை மட்டும் கருணாநிதி வைத்துக்கொள்வார் என்ற தகவலையும் தந்துள்ளார்.
அடுத்தமுறை தி.மு.க. தமிழகத்தில் ஆட்சிக்குவந்தால் யார் முதல்வர் என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
அடுத்தமுறை மட்டுமல்ல, இனி என்றுமே தமிழ்நாட்டில் தி.மு.க. மட்டுமல்ல, திராவிடக் கட்சிகள் எதுவுமே ஆட்சிக்கு வரப்போவதில்லை. அப்படியே வந்தாலும் கூட்டணி ஆட்சிதான் அமையும்.
தமிழர்கள் ஏமாளிகள் அல்ல. முட்டாள்களும் அல்ல. அடுத்த தேர்தலின் முடிவு கழகக் கண்மணிகளின் வீழ்ச்சியாகத்தான் இருக்கும்.
காங்கிரசுக்கு அறுபத்தியேழில் ஏற்பட்டநிலையே கழகக்கண்மணிகளுக்கும் ஏற்படும்.
இது எனது ஆதங்கம் மட்டுமல்ல, நடக்கப்போகும் உண்மையும் கூட!
Tuesday, January 25, 2011
Subscribe to:
Post Comments (Atom)
Hello Nanbarey
ReplyDeleteEllam Poi Vesam
Arasiyalvathikalai Patri Innum Neer Ariyavillaya............
பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது ஓர் அனுபவ மொழி. இது திருட்டுக்கு மட்டுமல்ல; பம்மாத்து-பாசங்கு- போலி வேடதாரிகளுக்கும் பொருந்தும். ஆகாவென ஆர்ப்பாட்டம் செய்த டாம்பீகச் சாமியார்களின் வேடம் கலைந்தது போல், கலைஞரின் வேடம் கலையும் காலக் கட்டம் இது. அதை பதிவின் முடிவில் உறுதிபடத் தெரிவித்துள்ள்ளேன். படிக்கவில்லையா, குமார் அவர்களே!
ReplyDelete