கயல்விழி, தமிழ் அறிஞர் இறைக்குருவனாரின் மகள். பெருஞ்ச்சித்திரனாரின் பேத்தி. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிகின்றார்.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட, ஈழத் தமிழர்களைச் சந்தித்திட உரிய ஆவணங்களுடன் இலங்கை சென்றுள்ளார். இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்புகையில், இலங்கை இராணுவம் அவரைக் கைது செய்துள்ளது.
பிரதமர் மற்றும் எஸ்.எம் கிருஷ்ணாவிற்கு வை.கோ. தொலைநகல் மூலம் கடிதம் அனுபியுள்ளார்.
அவரைப்போலவே மத்திய அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிடவேண்டுமென்று பழ.நெடுமாறனும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோரிக்கைகளாலும், வேண்டுகோள்களாலும் பிரச்சினைகள் தீர்ந்துவிடப்போவதில்லை.
இந்தியா உடனடியாக இலங்கையுடன் தூதரக உறவுகளை முறித்துக்கொண்டு, கச்சத்தீவு மீட்பு, மீனவர்கள் பலித்தடுப்பு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவேண்டும்.
வெற்றுக் கோரிக்கைகளும், வீண் ஆர்ப்பாட்டங்களும் தீர்வாகிவிட் முடியாது.
என்ன செய்யப்போகின்றனர் தமிழகத் தலைவர்கள்?
Monday, January 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.