Tuesday, January 25, 2011

உள்ளங்கையில் உலகம்-உலகத்தின் விலை ரூபாய் நானுறு! அகிலத்தை அறிவோம்!


பூவுலகில் உள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கை இருநூற்று நாற்பத்து ஐந்து. அதில் நூற்று தொண்ணூற்றி இரண்டு நாடுகள் அனைத்து நாடுகளாலும் அங்கீகரிக்கப் பட்டவை.

அனைத்து நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்டும் ஐ.நா. சபையில் உறுபினராகத நாடு, போபாண்டவரின் வாடிகன் சிட்டி. ஆனால், சிறப்புத் தகுதியுடன் ஐ.நா. சபையின் பார்வையாளராக அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தம் நூற்று தொண்ணூற்றி மூன்று நாடுகளைப் பற்றிய முழுமையான தகவல்களும் தொகுக்கப்பட்டுள்ளன.

அகிலத்தை அறிவோம் என்னும் தலைப்பில் இரண்டரை ஆண்டுக்காலம் தொடராக வெளிவந்தது.

உலக நாடுகளின் மக்கள் தொகை, மக்களின் சராசரி வயது பரப்பளவு, தலைநகரம், மொழி, மதம், நாணயம், எழுத்தறிவு, உலக நாடுகளில் எந்தவரிசையில் இடம்பெற்றுள்ளது, நாட்டின் பூகோள அமைப்பு, நாட்டின் வரலாறு, ஐ.நா.வில் சேர்ந்த நாள், அரசின் தன்மை, நிர்வாகப் பிரிவுகள், பொருளாதார நிலைமை என்பதாக ஒவ்வொரு நாட்டைப்பற்றிய தகவல்களும் நிறைந்து தொகுக்கப்பட்டுள்ளன.

உலகில் ஐம்பத்து மூன்று நாடுகள் ஐ.நா.-வில் சேராமல் உள்ளன.

பெரும்பாலான நாடுகளின் அங்கீகாரம் பெறாமல், உலக வங்கி, ஆப்பிரிக்க யூனியன் போன்ற சர்வதேச அமைப்புக்களில் உறுப்பினராகி, பிற நாடுகளுடன் உறவு கொள்ளும் தன்மை படைத்த நாடுகள். ஆனால், ஐ.நா. சபையில் உறுப்பினரல்லாத நாடுகளின் எண்ணிக்கை மொத்தம் ஒன்பது. அவையாவன. அவை சீனக் குடியரசு (தைவான்), கொசாவோ குடியரசு, சஹ்ராவி அரபு ஜனநாயகக் குடியரசு, அப்காசியா குடியரசு, தெற்கு ஒசேட்டியா, வட சைப்ரஸின் துருக்கிக் குடியரசு, கோர்னா-கரபா குடியரசு, சோமாலிலாந்து குடியரசு, டிரான்ஸ்ஸ்ட்ரியா .

பிற நாடுகளின் தயவில் உள்ள மனிதக் குடியேற்றமுள்ள நாடுகள் முப்பது எட்டு.

மூன்றாவதாக, சர்வதேச உடன்படிக்கைகளால் அங்கீகரிக்கப்பட்டவை. ஃப்ன்லாந்தில் உள்ள அலண்டு தீவு, நார்வேயில் உள்ள ஸ்வல்பார்டு, பாலஸ்தீனம், மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஹாங்காங், மக்காவ் ஆகிய் ௫ நாடுகள்.

உலக நாடுகள் அனைத்தைப்பற்றிய தகவல்களையும் திரட்டித் தமிழில் தந்துள்ளார், எஸ்.சோமு என்றழைக்கப்படும் எஸ்.சோமசுந்தரம். எம்.எட். டி.எஸ்.எம். இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

தமிழில் இதுபோன்ற நூல் இதுவரை வந்ததில்லை. ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய புத்தகம்.

இரண்டு பாகங்களாக வந்துள்ளது. ஒவ்வொரு பாகத்தின் விலை ரூபாய் இருநூறு. கிடைக்குமிடம். வைரம், வைரம் வெளியீடு, ௧, கிழக்கு சர்க்குலர் சாலை, இரண்டாம் மாடி, சாந்தோம், சென்னை-௬00 0௨௮. தொலைபேசி எண்:-
044-2461 4448


இரண்டரை ஆண்டுக்காலம் தொடராக வெளியிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (வலது) அதிகார பூர்வமான நாளிதழ் ஜனசக்தி ஆசிரியர் தா.பாண்டியன், ஊக்குவித்த ஸ்டாலின் குணசேகரன், கே.ஜீவபாரதி மற்றும் அனைவரையும் மனமாறப் பாராட்டுவோம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.