Saturday, January 15, 2011

ஆயிரமாயிரம் நெஞ்சங்களின் முயற்சிகள் வெற்றி பெறுமா?




ரத்தச் சரித்திர உண்மை நிகழ்வுகளைப் பதினொன்று மணி நேர உழைப்பில் வலைப்பூ காவியமாக்கியுள்ளார், நண்பர், உண்மத்தமிழன்! படத்தில் உள்ள பினாயக் சென் தகவல்களைத் தொகுத்திடவும் அது போன்றே உழைத்திடல் வேண்டும். என்வே, நேரடியாகவே விஷயத்திற்கு வந்துவிடுகின்றேன்.

தற்பொழுது இந்தியாவில் சிறைப்பட்டுள்ள அந்த மானுட விசுவாசிக்காக வையகமே அணி திரள்கின்றது. அவருக்கென்று,

1. www.binayaksen.net.

2. http://www.freebinayaksen.org

3. http://www.savebinayak.ukaid.org.uk/index.html

ஆகிய மூன்று இணைய தளங்கள் இயக்கப்படுகின்றன.

வையத்துள் வாழ்வாங்கு வாழும் சிலருள், குறிப்பிடத்தக்கவர், பினாயக் சென்! நமது வேலூர் மருத்துவக் கல்லூரியின் உருவாக்கம்! சமூகவியல் பாடங்களில் இடம்பெற வேண்டியது அவரது வாழ்க்கை வரலாறு.

பிலாசபூரில் 2007-ல் கைதானவர், 2009-ல் விடுதலையானார், உலக மக்களின் உரத்த கண்டனங்களும் காரணிகளாக உதவின. அவரை விடுவிக்க 9721-பேர் கையெழுத்திட்டுள்ள பெட்டிஷன் www.binayaksen.net. -ல் உள்ளது.

தற்பொழுது மீண்டும் சிறைவாசம். ஆயுள் தண்டனையில்!

பழங்குடி மக்களுக்காக ஸ்ட்டீஸ்கர் பகுதியில் மருத்துவப் பணியினைத் தொடர்ந்து வருகின்றார்,பினாயக் சென். மக்கள் சிவில் உரிமைக் கழக ஆர்வலர்.

இந்தியப் பொதுநலவாதிகளும், மெய்யான ஜனநாயகவாதிகளும், மனித உரிமை அமைப்புக்களும் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்திலும் இம்முயற்சிகள் தொடர்கின்றன.

ஆயுள் தண்டனை ரத்தாகி, அவர் மனைவி, இரு புதல்வியர், மற்றும் உடன்பிறப்புக்கள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், மற்றும் நண்பர்கள் அனைவர் உள்ளங்களும் மகிழ்ச்சி பொங்கிட பொங்கல் நாளில் எல்லோரும் பினாயக் சென்னை ஒருநிமிட அளவிற்கேனும் சிந்திப்போம்!

1 comments:

  1. சொர்க்கத்திலிருந்து அந்தோணி முத்து எழுதியது. எப்படி? எனது பினாயக் சென் குறிதத 1999-ஆண்டு பதிவிற்கு பாஸிட்டிவ் அந்தோணி முத்து எழுதிய பின்னூட்டத்தின் ஒருபகுதி>
    //"வெறுக்கப் பட வேண்டியது குற்றங்கள்தான்; குற்றவாளியை அல்ல" என்று போதித்த மகாத்மா காந்தியைத் தந்தையாகக் கொண்ட புண்ணிய பூமியில் ஒரு புனிதருக்கு சாதாரண அமைதியான வாழ்க்கை கூட மறுக்கப் படுவதென்பது எந்த வகையில் நியாயம் ? //

    ReplyDelete

Kindly post a comment.