Monday, January 17, 2011

1913-ல் வைஸ்ராயின் ஜென்மதினம்,மற்றும் நவம்பர் 14-ன் முன்னோடி





1913-ஆம் ஆண்டு ஜூலை மாத சஞ்சிகை, விவேக சிந்தாமணி மணிப்பிரவாளத்தமிழிஷ்-ல் வெளிவந்துள்ளது.

அன்பேயவன்! அறிவே சக்தி! ஓம் தத்ஸத்! GOD IS LOVE KNOWLEDGE IS POWER
ஸத்யமே ஜெயம்-SATYAMEVA JAYATE

என்று முகப்பில் காணப் படுகின்றது. இது மட்டும் அல்ல செய்தி. உலகில் புதியதாகச் சொல்ல எதுவுமில்லை. நமக்குத் தெரியாதனவெல்லாம் புதியது. தெரிந்தனவெல்லாம் பழையது. என்றொரு கருத்து உண்டு. அதுவேதான் எல்லாவற்றிற்கும் என்று கூடச் சொல்லலாம். புதிய அறிவியல் உண்மைகள எத்தன்மையது என்ற வினா எழலாம். இந்த புவிக் கோளில் ண்டுபிடிக்கும் அறிவியல் உண்மைகளையெல்லாம் ஏற்கனவே தெரிந்து கொண்ட பிறிதொரு பூமி உலகில் வேறெங்கோ இருக்கக் கூடுமல்லவா?

நமது பாரதப் பிரதமர் நேருவின் பிறந்ததினம் குழந்தைகள் தின விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை நாம்தான் முதலில் செயல்படுத்தினோம் என்று மார்தட்டிக் கொள்ள முடியாது.

ஏனெனில், 1913 ஆம் ஆண்டில், அப்போதைய வைஸ்ராய், ஸ்ரீ ஹாடிஞ்ச்சின் ஜென்மதினம் குழந்தகள் தினமாகக் கொண்டாடப் பட்டிருக்கின்றது.-என்ற தகவல், 1913-ஆம் ஆண்டு ஜுலை விவேகசிந்தாமணியில் அச்சாகியுள்ளது.

மேற்படி குழந்தைகள் தினவிழாவில், கற்றதோர் கல்வி மனப்பழக்கம் என்ற தலைப்பில் ஆற்றியுள்ள மணிபிரவாள நடைச் சொற்பொழிவைப் படித்தால் தலை சுற்றும். வைஸ்ராய் புகழ்பாடும் பேச்சுக்கள் இன்றைய காலில் விழும் கலாச்சாரப் புகழ் உரைகளை எல்லாம் விஞ்சி நிற்கும்.

பொள்ளாச்சி ந்சன் தந்த த்கவல் இது. மேற்படி விவேக சிந்தாமணியை நாளொரு நூல் பகுதியில் இன்று வலையேற்றம் செய்துள்ளார். இளமைத்துள்ளலுடன் கூடிய அவர் தொலைபேசி உரையாடல் உற்சாக டானிக்!

0 comments:

Post a Comment

Kindly post a comment.