Sunday, March 28, 2010

இவரது வாழ்க்கையில் மதுரா டிராவல்ஸ் V.K.T. பாலன் ஏற்றிவைத்த சுடர் மேலும் எப்பொழுது ஒளிர் விடுமோ?




தன் நிலையில் எந்த இழப்பையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், தன்னிடம் பேசுவோரிடம் எல்லாம் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் பெருகிடச் செய்யும் ரெட்ஹில்ஸ் அந்தோணி முத்து படித்தது 5 ஆம் வகுப்பு கூட இல்லை என்று அழகி விஸு சொல்வது வியப்பாக உள்ளது.

ஆனால், பேசிப் பார்த்தால் உண்மை என்று தெரிகின்றது.அளவிறந்த உலகியல் அறிவு நிறைந்தவர். என்வே சந்திக்கவே அச்சமாக இருக்கின்றது.ஆனால் இனியும் அவரது சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தாவிட்டால் நாம் மனிதரே இல்லை என்பதும் புரிகின்றது.

மார்புக்குக் கீழ் இயக்கமே அற்ற அவர்- "ஒரு கை" வித்தகர் கணிப் பொறியில்! இசை அமைப்பாளரும் கூட.

அவர் வாழ்க்கையில் எதிர் பார்ப்பது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புக்களையே! ஒரு பக்கப் பேட்டியும்/ ஒரு சில நிமிட நேர ஒளி பரப்பும் அல்ல!

குவான்டம் அறிவியலில் ஆர்வம் உடையவர். ஆரய்ச்சியும் செய்து வருபவர்.

words of Divine Music - Anthony

0 comments:

Post a Comment

Kindly post a comment.