
84 வயதுப் பெண்மணி கடந்த வியாழனன்று தேனாம் பேட்டை போலீஸ் ஸ்டேசனுக்கு புகார் தந்தார்.அவை பெயர் லலிதா. 1.5 லட்சம் வாங்கிக்கொண்டு நடிக்க வாய்ப்புத்தரவில்லை என்பது புகார். இயக்குநர் பெயர் அரவிந்த் ஜி மேத்தா. அவர் மீது இதே போன்ற புகார்கள் ஏராளமக உள்ளன. புழல் சிறையிலும் அடக்கப்பட்டு உள்ளார்.
பணம் கொடுத்து நடிக்க விரும்புவோருக்கும், நடிகர்களிடம் பணம் வாங்கி படம் எடுக்க விரும்புவோருக்கும் இது பாடமாக இருக்குமா?
ஆனால் இவை தொடர்கதையாககத்தானே உள்ளன்.
இந்தச் செய்திக்கும் குழந்தையுடன் உள்ள காந்தி படத்துக்கும் என்ன சம்பந்தம்?
எந்த வசதிகளும் அற்ற அந்தக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான் மைல்கள் உலகம் முழுவதும் பயணித்து 55-60000 அடிகள் காந்தியைப் படமாக்கி, நியூயார்க் சென்று எடிட் செய்து வரலாற்று ஆவணப் படம் எடுத்த முதல் இந்தியர் ஏ.கருப்பன் செட்டியார் என்கிற ஏ.கே.செட்டியார் குறித்து வாய்ப்புள்ள இடங்களை எல்லாம் சொல்லி வைக்கலாம் என்ற ஆசையில்தான்! குமரி மலரின் ஆசிரியரா என்று கேட்கிறீஈர்களா? ஆம் ! அவரேதான்!
0 comments:
Post a Comment
Kindly post a comment.