Sunday, March 28, 2010

ஆதீனங்களில் யார் இருக்க வேண்டும்?

சொந்த உடன்பிறப்பாக இருந்தாலும் 4-5 அடி தள்ளி நின்றுதான் பேச வேண்டும் என்பது அந்தக் காலத்தில் சகோதர சகோத்ரிகளுக்குக் க்ட்டுப்பாடு உண்டு.

இன்று ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்ந்தாலும் தவறு இல்லை என்று குஷ்பூவின் கருத்திற்கு உச்சநீதி மன்றமே ஆதரவு தெரிவித்துவிட்டது,

தமிழறிஞ்ர் வீராசாமி செட்டியார் எழுதிய வினோத மஞ்ச்ரி கண்ணிற்பட்டது.

அச்சம்-காணாததைக் கண்ட இடத்தில் அஞ்சுதலாம்
நாண் என்பது நாணம்-வெட்கப்படுதல்
மடம் என்பது எல்லாம் அறிந்தும் அறியாதது போல் இருத்தல்
(இப்பொழுது இதுதானே பாலியல்/அரசியல் எல்லாவற்றிலும்)
பயிர்ப்பு என்பது கணவர் அல்லாதவர் கை மேற்படின் உடம்பி அருவருத்தலாம்.(பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே முடியாது)

திருமணமில்லாமல் கன்னிகைகளய் இருக்கும் பருவத்தில் தய் தந்தையர் ஆதீனத்திலும்,

திருமணமானபின் கணவர் ஆதீனத்திலும்,

கணவர்க்குப் பிற்காலத்தில் புத்திரர் ஆதீனத்திலிலும்,

புத்திரர் இல்லாவிட்டால் சகோதரர் ஆதீனத்திலும்,

இருக்கவேண்டுமே அல்லாமல் ஒரு போதும் பெண்கள் சுவாதீனப்பட்டு இருக்கலாகாது.


சுவாதீனப்பட்டு என்பதற்குப் பொருள் வீராசாமி செட்டியாரிடம்தான் கேட்கவேண்டும். ஏனெனில், கணவனையும் மனைவியையுமே ஆதீனம் பிரிக்கின்றது.

சாமியாரும் மனைவியும் வீட்டில் இருந்திருக்கக் கூடும்!

4 comments:

  1. தாயும் மகனானாலும், தந்தை மகளானாலும், சகோதரன் சகோதரியானாலும், இரவில் தனியறையில் படுத்து உறங்கக்கூடாது என்று பல சாத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

    இன்று நமக்குத்தான் எந்த சாத்திரங்களும் கிடையாதே?

    ReplyDelete
  2. it is not safe to live with KAAVI dress team:

    ReplyDelete
  3. NavaneethakrishnanApril 11, 2010 at 3:34 PM

    ஆதீனம் என்ற சொல் ஆதிக்கம் பாதுகாவல் என்ற பொருளிலேயே இங்கு குறிப்பதாகக் காண்கிறேன். அது போலவே சுவாதீனம் என்பது தனித்திருத்தல் என்ற பொருளில் வழங்கியுள்ளார். அன்றைய காலகட்டத்தில் இருந்த ஆணாதிக்க மனப்பாங்கின் படி அமைந்தது.
    (இன்று என்ன வாழ்ந்தது என்று கேட்கிறீர்களா?)

    ReplyDelete
  4. ஆதீனத்திலிலும் = பாதுகாப்பிலும்
    சுவாதீனப்பட்டு = தனியாக

    ReplyDelete

Kindly post a comment.