Friday, March 26, 2010

இணையமும் தமிழும்- நாம் எங்கே போகின்றோம்?



விக்கிபீடியா என்றால் என்ன என்று தெரியாத படித்தவர்கள் ஒரு பக்கமும், க்ட்டற்ற களஞ்சியம் என்று தமிழில் மொழி பெயர்த்துவிட்டுச் சில கட்டுரைகளை, சில நூல்கள் முழுமையற்ற முறையில் எழுதிவிட்டு உலாவருவோரும் உள்ளனர். விசாரித்ததில் தமிழில் சுமார் 600 கட்டுரைகள்தான் விக்கிபீடியாவில் உள்ளன என்பதாகத் தெரிகின்றது.

அனத்துத்துறை சார்ந்தோரும் தாம் சார்ந்த துறை குறித்துக் கலந்தாலோசித்து பல்வேறு தலைப்புக்களில் ஒவ்வொரு கட்டுரை எழுதினாலே லட்சங்கள் தாண்டிவிடும் வெகு விரைவில்.

முனைவர் துரை மணீகண்டன் எழுதிய இணையமும் தமிழும் புத்தகம், சென்னை-17-ல் 17/3சி மேட்லி சாலயிலிருந்து வெளியிடப் பட்டுள்ளதைப் பார்த்து வியப்படைந்தேன்.

லேனா தமிழ்வாணன் கண்ணில் படாமல் போன தலைப்பு என வியந்தேன். திருச்சிக்காரரின் துணிச்சல் பாரட்டத்தக்கது.

இணயம் ஓர் அறிமுகம், இணயத்தின் வரலாறு, இணய்த்தில் தமிழ், இணயம் தொடர்பான மாநாடுகள்-கருத்தரங்குகள், இணயத்தில் தமிழில் பயன்பாடு, இணயத்தில் தமிழ்க்கல்வி, இணையத்தில் தமிழ் மின் இதழ்கள், இணயத்தில் தமிழ் மின் நூலகம், இணயம் வழி கணினி ஆய்வுகள் என்று ஆரம்பப் பள்ளி மாணவன் கூடப் புரிந்துகொள்ளுமாறு விளக்கமாக எழுதியுள்ளார்.

இணய அகராதி குறித்த விள்க்கம் சற்றுச் சிந்திக்கத் தக்கது. விக்கி பீடியாவை கட்டற்ற களஞ்சியம் என்று மொழியாக்கம் செய்துதான் தீர வேண்டுமா? லாரி, கார், மோட்டார், ரெயில், போன்று மக்கள் மத்தியில் பழ்க்கமாகிவிட்ட சொற்களுக்குப் புதிய தமிழ்ச் சொற்களைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்ல்லை என்ற டாக்டர்.மு.வரதராசனார் காட்டிய வ்ழியைப் பின்பற்றினால் நன்றாக இருக்குமே?

சுமார் 150 இணையத் தமிழ் இத்ழ்களின் முகவரியைத் தேடித்தந்திருப்பது நல்ல சாதனை!

18 தமிழ் கணிமை நிறுவனங்களச் சுட்டியுள்ளார். இலவசங்களாகத் தருவதையும், விலைக்கு விற்பதையும் பிரித்துக் காட்டியிருக்கலாம்.

பல்கலைத்த் தளங்கள், தமிழ் இணைய நூலகங்கள், தமிழ் கணிமச் சுவடிகள், ஆய்வுக் கட்டுரை, சிறு விளக்கங்கள் கொடுத்திருந்தால் என் போன்று துவக்க நிலையில் இருப்போருக்கு பேருதவியாய் அமைந்திருக்கும்.

தமிழ் இணைய வானொலி நிறைய விடுபட்டுள்ளன். அதற்கென்றெ தனி இதழ் வருகின்றது. ஆசிரியரும் அமிஞ்சிக்கரையிதான் உள்ளார். இந்த் வலைப்பூவில் தேடினாலே கிடைக்கும் குறைவாகக் கூறவில்லை. அடுத்த நூலில் சேர்த்துக் கொள்ளலாம்.

worldtamilnews.com உலகின் முதல் தமிழ் இணைய வானொலி முகவரி சென்னை எழும்பூரிலிருந்து 8 ஆம் வ்குப்பு மட்டுமே படித்த vkt பாலன் அவர்களால் நடத்தப் படுகின்றது.9841078674

தமிழ் இணய்தளத் தேடும் எந்திர முகவரி எனக்குப் புதிய தகவல்.


நல்ல புதிய முயற்சிக்கு முனைவர். துரை மணிகண்டனுக்கு வாழ்துக்க்கள்!.

.

2 comments:

  1. நான் இன்றுதான் இந்த செய்தியைக் கண்டேன். மிக்க நன்றி அய்யா. உங்கள் புத்தகப் பார்வையை, மதிப்பீட்டை நான் பாராட்டுகின்றேன்.நீங்கள் குறிப்பிட்ட குறைகளை நான் அடுத்த புத்தகத்தில் பூர்த்திசெய்கின்றேன்.எனது அடுத்த புத்தகம் இணையத்தில் செம்மொழித்தமிழ் தரவுதளங்கள் என்பதாகும். அதில் நீங்கள் கேட்ட அனைத்து விபரங்களும் இருக்கும்.

    அன்புடன்
    முனைவர் துரை.மணிகண்டன்.

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா!
    நான் ஒரு மேலாண்மைத்துறை மாணவன். என்னிடம் 3 கேள்விகள் உள்ளன. உங்கள் தயவில் தெளிந்து கொள்ள ஆர்வம்.

    இதுபோன்ற கணினித் தமிழுக்கென தனி சொற்களஞ்சியங்கள் உள்ளனவா?? அவை எங்கு கிடைக்கும்? உதவுங்களேன்..

    ஆங்கிலத்தில் மட்டுமே தான் மின்னஞ்சல் முகவரி கூட வைத்துக் கொள்ள முடிகிறது வேதனையளிக்கிறது. தமிழில் இது சாத்தியப் படுமா?

    தமிழில் இயங்குத்தளங்கள் உருவாக்குதல் அவ்வளவு கடினமா? Machine level languages அனைத்துமே மொழி சார்பற்றவை தானே. ஏற்கனவே வழக்கில் உள்ள இயங்கு தளங்களையே சுலபமாக மொழி மாற்றம் செய்து விட முடியுமே. WINDOWS இயங்கு தளங்களுக்கு மொழி இடைமுக தொகுப்பு (மன்னிக்கவும் language interface pack ) உள்ளதை போன்று LINUX யிலும் செய்யலாமே.

    ReplyDelete

Kindly post a comment.