மும்பையிலிருந்து கிடைத்துள்ள தகவல் மகிழ்ச்சி தருவதாக உள்ளது.மேலே உள்ள சிலையப் பெங்களூரூ வில் திறந்து வைத்திட பல ஆண்டுகள் காத்திருந்து, மேலும் பல் சில விட்டுக் கொடுப்புக்களுக்குப்பின்தான் முடிந்தது.
ஆனால், திருவள்ளுவரின் திருக்குறட்களின் அடிபடையில் தயாரிக்கப்படும் ஏக்தா ஜங்கிள் என்னும் பெயரில் , நாடி அனிமேஷன் முறையில் காலை 9 மணிக்கு ஒளிபரப்பப் போகும் தொடர் வித்தியாசமானது என்று அத் தொலக் காட்சியின் இண இயகுநர் தேவிகா பிரவு தெரிவித்துள்ளார்.
பரம்பரை பரம்பரையாக இருந்துவரும் பசுமையான கதைகளை தற்கால இளைஞ்ர்களுக்கு மீண்டும் அறிமுகப்படுத்தும் வகையில் பழம் பெரும் இலக்கியமான திருக்குறளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஒவ்வொரு காட்சியும் தற்கால வாழ்க்கைககு ஏற்றவாறு உலகிற்குப் பொதுவானதாக இருக்கும் என்றார்.
திருக்குறள்தான் குடும்பப் பெருமைகளை முன்னிலைப் படுத்திய முதல் நூல். உலகின் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இத்தொடரின் ஒவ்வொரு கதையும் திருக்குறள் ஒன்றின் மூலம் விலங்குகள் பேசுவதாக அமைந்திருக்கும் என்று தேவிகா தெரிவித்தார்.
தகவல் உதவி ஜனசக்தி, மார்ச், 26, 2010
0 comments:
Post a Comment
Kindly post a comment.