அவதார் -விமர்சனமும் -ஆசையும்!
அம்புலி மாமா கதைகளப் படமாக்கினால் நிச்சயமாக நல்ல வரவேற்பிருக்கும்.
கணினி இல்லாத காலத்தில் கற்பனை செய்யப்பட்டவைகளைவிடப் பன்மடங்கு இன்றைய சூழலில் சிந்திக்கப்பட்டு எடுக்கப் பட்டுள்ளது. அம்புலிமாவில் வேறு நாடு. இதில் வேற்றுக் கிரகம். அதில் ந்ட்பு நாடுகளுக்கு உதவுவது/ பகை நாடுகளுடன் போரிடுவது எல்லாமே உண்டு.
ப்ன்டோரா வேற்றுக் கிரகம். அங்கு வசிப்பவர்கள் நவி என்று அழைக்கப் படுகின்றனர். அவர்களிடம் உள்ளது ஓர் அரிய கனிமப் பொருள். உலகில் உள்ள பெரு வணிக நிறுவனங்களுக்கு அந்தப் பொருளின் மீது ஆசை. சட்டாம்பிள்ளைத்தனம் செய்யும் அமெரிக்காவுடன் கைகோர்த்துப் போரிடுகின்றனர்.
அறிவியல் உதவியால் நவி மனிதர்கள் உருவாக்கப் படுகின்றனர். அதில் கால் ஊனமுற்ற கடற்படை வீரன் ஜேக் ஜல்லி ஒத்துழைக்க முன் வருகின்றான், பணத்திற்காக! ஆனால் நவி இனத்தோரின் அன்பும், நேத்ரி என்ற அழகியின் காதலும் பண்டோராவிலேயே வாழ முற்பட்டுவிடுகின்றான்.
பன்டொராவின் இயற்கையும் செல்வமும் பெருவணிக நிறுவனங்கள் மற்றும் அமெரிக்காவின் அணு ஆயுதங்களின் வலிமையால் சூரையாடப் படுகின்றன. ஆனால் வேற்றுக் கிரகத்தில் வசிக்கும் அசுர பலங்கொண்ட மிருகங்களின் உதவியால் மீண்டும் பண்டோரா வெற்றி பெறுகின்றது. இயற்கையை ஒருபோதும் வெல்ல முடியாது என்பதுதானே நமது சுனாமியின் அனுபவம்.
கடல் கொண்ட தென்னாடு கபாடபுரம்- மூன்று சங்கங்கள்- எல்லாம் உண்மைதான் என்பதை சுனாமிதான் நமக்கு உணர்த்தி விட்டதே!
ட்ஸ்னியின் வடிவில் திருக்குறள் கதைகள் வர இருப்பது போன்று, அம்புலிமாமா வேதாளக் கதைகளை எல்லாம் நம் தென்னவர்கள் இந்தி/ஆங்கிலத்தில் எடுக்க ஆரம்பித்தால் கோடி கோடியாகக் குவிக்கலாம். அவதார் போன்று 100 நாட்கள் என்ன அதற்குமேலும் கொண்டாடலாம். பொன்னாடைக்குப் பதில் பணம்/நிலம்/வீடு.தாருங்கள் என்றெல்லாம் கேட்டுப் புலம்ப வேண்டாம்.
என்ன சரிதானே வலைப்பூ அன்பர்களே?
0 comments:
Post a Comment
Kindly post a comment.