Monday, March 29, 2010

எங்கே போகின்றோம்? எல்லோருமே மனிதர்கள்தானே என்ற எண்ணம் எல்லோருக்கும் எப்பொழுது ஏற்படும்?










ஆப்கனிஸ்தானின்

நிர்வாக எந்திர இருப்பிடம்.


உலகின் இரண்டாவது ஏழை நாடு ஆப்கானிஸ்தானம். போதைப் பயிர் வளர்ப்பும் விற்பனையுமே அதன வருமானம். போதைப் பொருட்களால் ஆண்டொன்றிற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தானியர் மரணிக்கின்றனர்.

ரஷ்யாவில் போதைப் பொருட்களுக்கு இரண்டு லட்சம் பேர் அடிமை. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் போதையினால் இறக்கின்றனர். ரஷ்யாவில் உள்ள போதைப் பொருட்களின் எதிர்ப்பு அமைப்பாளர் தலைவர் விக்டர் இவானோவ் ஆப்கனில் போதைப் ப்யிர்களை அழிக்கச் சொல்கின்றார்.

28-க்கும் மேற்பட்ட நாடுகளைக் கொண்ட NATO நார்ஹ் அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் ஆப்கனில் போதைப் பயிர்களை அழிக்கக் கூடாதென்று எதிப்புத் தெரிவிக்கின்றனர்.

இவை எல்லாம் படித்ததில் நான் புரிந்து கொண்டவை. தவறுகள் இருப்பின் திருத்தலாம். மனித உயிர்களின் மலினம் மன வேதனக்குள்ளாகின்றது.

சாராயக் கடைகளின் பக்கத்தில் விபசார விடுதிகள் ஏற்படுத்தக்கூடும். கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஆதரித்துப் பாதுகாத்துக் கட்டுப் படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது.

எனக்கு வயது 28, 35000 சம்பளம், 5 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ துணை தேவை
என்று விளம்பரங்கள் வரலாம். உச்ச நீதிமன்றமே ஆட்சேபணை இல்லை என்று சொல்லி விட்டது.

குஷ்பூ சொன்னபோது கூச்சலிட்ட தமிழகம்,குமுதம் வாக்கெடுப்பில் பங்கேற்கின்றது.

1 comments:

  1. <<<
    தவறுகள் இருப்பின் திருத்தலாம். மனித உயிர்களின் மலினம் மன வேதனக்குள்ளாகின்றது.
    >>>

    mmmm.... true! we are losing our humanity

    ReplyDelete

Kindly post a comment.