Sunday, January 10, 2010

வாடகை மனைவி போன்ற பரபரப்பான செய்திகளை வெளியிடுவதன் மூலம் என்ன சாதனை நிகழ்த்தி விட்டன அந்த பத்திரிக்கைகள்?



உடலைக் காட்டிப் பிழைப்போருக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறதென்றே தெரியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் இது போன்ற நிகழ்வுகளைப் பிரசுரித்துத்தான் பத்திரிக்கை விற்பனையை அதிகரிக்க வேண்டுமா என்ன? அந்த அளவிற்கு செய்திப் பஞ்சமா? பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் என்ன வேண்டும் செய்யலாமா?

சமூகச் சீர்திருத்தம்தான் உங்கள் நோக்கம் என்றால் தவறு செய்பவர்களைக் காவல்துறையிடம் காட்டிக் கொடுப்பதுதானே? இதன்மூலம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை அந்தச் செய்தியைச் சேகரித்தவரும் அடுத்த இதழில் தெளிவுபடுத்தினால் நீங்கள் மனச்சாட்சியுள்ளவர்கள் என்று ஒப்புக் கொள்ளலாம்.

வாடகை மனைவியைக் கருவாகக் கொண்டு பல ஆண்டுகளுக்கு முன்பே குமுதத்தில் தொடர்கதை ஒன்றும் வந்துவிட்டது. நேற்றைய கற்பனை இன்று நிஜமாகியுள்ளது.

குமுதத்தில் ரத்தம் ஒரே நிறம் என்ற தலைப்பில் ஓர் தொடர்கதையை சுஜாதா எழுத முற்பட்டார். ஓரிரு தொடர்களுக்குமேல் அவரை எழுதவிடாமல் ஒரு சமூகத்தினர் தடுத்துவிட்டனர். தொடரும் நின்றுபோனது.

ஆனால், மனிதத்தை இழிவுபடுத்தும் விதத்தில் எழுதப்படும் இது போன்ற தகவல் கட்டுரைகளை ஒருவருமே கண்டுகொள்வதில்லையே. ஏன்? மகளிர் அமைப்புக்கள் கூட மௌனம் சாதிப்பது ஏன்?

மீண்டும் சொல்வேன் முதலில் எழுதியுள்ள வரிகளை!

1 comments:

  1. Vikatan has lost its quality long back. 3months back they tried to increase their circulation by an article named iavrthaan ungal hero or something.

    That is also a copy of earlier's kumudam's style (padutahalam kumaran)

    ReplyDelete

Kindly post a comment.