Tuesday, January 12, 2010

பாரதியார் - ஈ. வே.ரா- சொர்க்கத்திலிருந்து பாராட்டுகின்றனர், டிரைவர் திலகவதியை!


ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாய் வாழவேண்டும் என்று விரும்பினார் எட்டயபுரத்து மீசைக்காரக் கவிஞர், சுப்பிரமணிய பாரதியார்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர், பெரியாரோ, ஆண்-பெண் பெயர்-உடைகளில் எத்தகைய வேறுபாடுமின்றி உடை அணியச் செய்தார். அதனால்தான், குழந்தகளுக்குப் பெயர் சூட்டச் சொன்னால், மாஸ்கோ, லண்டன் என்று கூடப் பெயர் வைத்தார். கிண்டல் செய்தோரிடம் பழனி என்று பக்தியாளர்கள் பேர் வைக்கவில்லையா என்று வினா எழுப்புவார்.

பாரதியின் கனவையும், பெரியாரின் ஆசையையும் இன்று சில மகளிர் நிறைவேற்றி வருகின்றனர். அந்தப் பட்டியலில் , சேலம், கவுண்ட நாயக்கபுரம் திலகவதியும் சேர்ந்துள்ளார். சாதாரணமானவரல்ல. எலக்டிரிகல் மற்றும் எலக்டிரானிக்ஸ் எஞ்சினீயரிங் படித்தவர்.

1995-ல் போபாலில் துணை ரெயில் டிரைவராக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் சரக்கு ரெயிலிலும், தற்பொழுது மின்சார வண்டியிலும் பணியாற்றுகின்றார்.

ஆண் பெண் பேதமின்றி வாழ்ந்தால், பெண்களுக்கு வாழ்க்கையில் ஏமாற்றமே வராது. திலகவதி பாராட்டப் படவேண்டிய பெண்மணி! வழிகாட்டியாகப் போற்றிப் புகழப் படவேண்டிய மாதரசி! மீடியாக்கள் பாராட்டுகின்றன. வலைப்பதிவாளர்களாகிய நாமும் அவ்ர்களோடு சேர்ந்து கொள்வோம்!

0 comments:

Post a Comment

Kindly post a comment.