Monday, January 11, 2010

மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி


நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய் எதிர்ப்பு தன்மையின்றியும் இருக்கிறது, மேலும் நாம் குடிக்கும் குடிநீர். சுவாசிக்கும் காற்று. மண் போன்ற இயற்கை வளங்கள் அனைத்தும் கெட்டுள்ளது, இவற்றின் மூலம் நம் உடலில் தினம் சேருகின்ற அழுக்கினால் இரத்தம் கெடுகின்றன, இரத்தம் அசுத்தம் ஆவதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு நோய்கள் உருவாகின்றன,

உலகம் என்பது பரந்து விரிந்துள்ளது, நாம் உலகத்தை சுத்தம் செய்ய முடியாது, நம் உடலில் தினம் சேருகின்ற அழுக்கை சுத்தம் செய்ய முடியும், உடல் அழுக்கானால் எப்படி சோப்பு போட்டு குளிக்கின்றோமோ அதைப் போல் நம் உடலின் உள்ளே இருக்கும் உயிர்காற்றைக் கொண்டு மூச்சுப் பயிற்சி என்னும் பயிற்சியின் மூலம் இரத்தத்தை சுத்தம் செய்கின்றோம்,

மேலும் மூச்சுப் பயிற்சியின் மூலம் இரத்தத்தின் ஓட்டமும் உயிருடைய இயக்கமும் உடல் முழுவதும் சரிசமமாக இயக்கப்படுவதால் அதிகப்படியான சக்தியையும். ஆற்றலையும் பெறுகின்றனர், இதனால் நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் கூடிய துடிப்பான உடல் இயக்கமும் இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கமும் ஏற்படுகிறது, நோய் நொடிகள் இன்றி மாத்திரை மருந்துகள் இன்றி வாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய வாழ்விற்கு மூச்சுப் பயிற்சி வழி வகுக்கிறது,

2 comments:

  1. sir, any article/links related to 'Moochu payirchi' ?

    ReplyDelete
  2. மலேசியாவிலோ அல்லது சிங்கப்பூரிலோ ஒரு அன்பர் ஒருவர் அழகுத் தமிழில் இத்தகைய கருத்துக்களை எழுதிவருகின்றார். பயிற்சியும் நடத்தி வருகின்றார். எனது கவனக் குறைவால் அந்த url தற்சமயம் இல்லை. கிடைத்தவுடன் தெரியப்படுத்துவேன். இந்த மூச்சுப் பயிற்சி அவரிடம் சுட்டதுதான். பிராணாயாமம் என்பதை மூச்சுப் பயிற்சி என்று மட்டும் மாற்றியுள்ளேன். நல்லன எல்லோருக்கும் போய்ச் சேரவேண்டும் என்பதே நோக்கம். வருகைக்கு நன்றி. பாவக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. அதுசரி! பாகற்காய் என்பதுதானே சரி?

    ReplyDelete

Kindly post a comment.