Wednesday, December 2, 2009

சென்னை ஞாநி- மதுரை அபராஜிதா- தமிழக அரசு+ எனது ஆற்றாமை






மெய்யான பெரியார் அன்பர், பன்முகப் படைப்பாற்றல் கொண்டசென்னை ஞாநி, கோலம் என்றொரு அமைப்பின் மூலம் நல்ல திரைப்படங்களைத் தரும் அரியதோர் முயற்சியில் ஈடுபட்டு்ள்ளார். 3 மாதங்ளுக்கொரு முறை ரூபாய் 500/- விரும்பியவர்கள் தரலாம். ஒரு DVD வீடு தேடி வரும். அனுப்பிய தொகைக்கு அவரே கையெழுத்திட்ட ரசீதும் உடனுக்குடன் வந்துவிடுகின்றது. இதை இங்கு பதிவு செய்வது ஞாநிக்குத் தெரியாது. அதாவது ஒரு திரைப்படம் பதிவிறக்கம் செய்யப்பட்ட dvd-குத் தனி நபர் வைத்துள்ள விலை ரூபாய் 500/-.இதுவே, தகவல்.

2600+3200=5800 மேல்நி்லை/உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளியில் இயங்கும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக, 2000-ம் ருபாய் , மதுரையில் உள்ள அபராஜிதா என்ற தொண்டு நிறுவனத்திற்கு அனுப்பச் சொல்லி அரசு அவசர ஆணை அனுப்பியுள்ளது. எதற்காக? அவர்கள் தயாரித்துள்ள "தளிர் திறன் தி்ட்டம்" என்ற புதிய பாடத் திட்டத்திற்கான dvd-யை வாங்குவதற்காக! 2009-2010 முதல் ^ ஆண்டுகளுக்குத் தொடரும்,இத்தி்ட்டம்! முதல் கட்டமாக 1.10 கோடி "அபராஜிதா"விற்குக் கிடைக்கும். பின்னர், 2010-2011 ஆண்டில் 4.35 கோடி கிடைக்கும். இதுவும் ஒரு தகவல்.

அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் வழங்கப்பட்ட கல்வி dvd-க்கள் பயன் படுத்தப்படாத நிலையில் உள்ளன. இதுவும் ஒரு தகவல்.

இது குறித்துச் சில நியாமான கேள்விகளைத் தினமணி 01-12-2009 செவ்வாய்க் கிழமை நாளிதழில் எழுப்பியுள்ளது. ஆர்வமுள்ளோர் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் ,(6,7,8-ஆம் வகுப்பு) மாணாக்கர்தம் திறனை அதிகரிக்கும் வகையிலும், உலக அனுபங்களைத் தெரிந்துகொள்ளும் வகையிலும் பாடத்திட்டங்களை வகுத்திருக்கும் பட்சத்தில், தனியார் பங்களி்ப்பைத் தேடிப் போகவேண்டிய அவசியம் என்ன?

தாங்கள் அவமதிக்கப்படுகின்றோம் என்ற உணர்ச்சி எந்தவொரு ஆசிரியப் பெருந்தகைக்கேனும் ஏற்படாதா? ஊதிய உயர்வுக்குப் போராடுவதற்கு மட்டும்தான் தொ்ழிற்சங்கங்களா?

"இனி மக்கள் ஆட்சி மலர்வதற்கு வாய்ப்பில்லை; என்றும் நிரந்தரமாக இருக்கும் அரசு எந்திரம்தான் ஆட்சி செய்கின்றது/நடக்கும்/நடத்தும்" என்று சொல்லியுள்ள- விலைவாசியைக் கு்றைத்திட, வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் போக்கிடவென சீசனல் போரட்டங்களை நடத்தித் தொண்டர்களின் போராட்ட உணர்வுகளுக்குத் தீனி போட்டுக் கோண்டிருக்கும் தா.பாண்டியன் போன்ற மக்கள் தலைவர்கள் இத்தகு பிரச்சினைகளை கையிலெடுத்துக் கொண்டு போராடக் கூடாதா?

மாற்றங்கள் நிகழுமா?

1 comments:

  1. sorry to say that, you have just touched 10 issues in 1 post, instead of that you could write in detail of 1 issue.

    ReplyDelete

Kindly post a comment.