Wednesday, December 2, 2009

மனித உடல்!உலகம்!தண்ணீர்!




Drinking sufficient pure and healthy water daily will:

  • Improve your mental and physical performance
  • Increase your enegy levels
  • Efficiently and effectively remove toxins and waste products from your body
  • Help reduce weight
  • Reduce headaches and diziness
  • Assist digestion


உலகத்தி்ன் மொத்த நிலப்பரப்பில் 75 சதவிகிதம் தண்ணீராக இருப்பது போல், மனித உடம்பிலும் உள்ளது வியப்பினைத் தருகின்றது. ஒவ்வொருவரது உடலமைப்பிற்குத் தகுந்தவாறு சிறிதளவு வேறுபாடுகள் இருக்கும்.

இரத்தத்தில் 90 சதவிகிதமும், தசைகளில் 60 சதவிகிதமும், எலும்புகளில் 22 சதவிகிதமும் நீராக வுள்ளது. சிறுநீராக 1500 மில்லியும்,வேர்வை-வியர்வையாக-400மில்லியும்,சுவாசத்தின் மூலமாக 400 மில்லியும், மலத்தின் மூலம் 100 மில்லியும் வெளியேற்றப் படுகின்றது.

உலகில், ஏரி,குளம்,கிணறு்,ஆறு,கடல் என நீர்ப் பகுதிகள் இருப்பது போன்று, உடலிலும்வயிறு,மார்பு,மூளை முதலிய இடங்களிலும் நீர்ப்பகுதிகள் உள்ளன.

வயிற்றுவலிக்கு வயிற்றில் நீ்ரினளவு குறைவதே காரணமாகின்றது. சளி,இருமல் தொல்லைகளுக்கு மார்பில் நீர் குறைவதே காரணம். மயக்கம் ஏற்பட மூளைப்பகுதியில் நீர் குறைவதே காரணம்.

தண்ணீர் தாரளமாகக் குடித்த நாட்களில் அதிகச் சுறுசுறுப்பும்,உற்சாகமும், உழைக்கும் திறனும் நன்றாக இருப்பதை அனுபவத்தில் காணமுடியும்.

அண்மையில், எனக்குத் தெரிந்த ஓர் பெண்நண்பர், மூட்டுவலியென்று டாக்டரிடம் செல்ல, அவர் மூட்டுப் பகுதியில் நீர் அதிகம் உள்ளதென்று ,அதை எடுத்துவிட, மூட்டுவலி அதிகமாகித் தற்பொழுது ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.

அதனால், தெரிந்திருந்தாலும், சில நல்லனவற்றைக் கடைப்பிடிக்காதலால் அனுபவிக்கும் உடல் கோளாறுகளுக்கு குடிக்கக்கூடிய தண்ணீரின் அளவு குறைந்து வி்ட்டதுதான் காரணம் என்பதை உணர்ந்ததன் காரணமாகத் திரட்டப் பட்டதே இந்தத் தகவல்கள் ,என்பதைத் தெரிவிக்கின்றேன்.

சுத்தமான தண்ணீரினைத் தாரளமாகப் பருகுவோம். உடல் நலம் பேணுவோம். மருத்துவச் செலவைக் குறைப்போம்.

வாயும் வயிறும் சுத்தமாக இருந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும் என்று எனது அப்பா அடிக்கடி் சொல்லிக் கொண்டே இருக்கின்றார், எல்லோரிடமும்! வயிறு சுத்தமாக இருக்க வேணுமானால் தண்ணீர் தாராளமாகக் குடித்திட வேண்டும். தென்கச்சி கோ.சுவாமிநாதன் பாணியில் ஒரு வார்த்தை; இங்கு குறிப்பிடுவது TASMAC தண்ணீரை அல்ல; என்றாலும் எல்லோருமே தென்கச்சியாராகிவிட முடியுமா என்ன?இருந்தாலும் ஒரு நிமிடம் அவரை நினக்க வைத்துவிட்டதில் மகிழ்ச்சி!

0 comments:

Post a Comment

Kindly post a comment.