Tuesday, December 1, 2009

நல்ல காலம் பொறந்தாச்சு, டாஸ்மாக் ஊழியருக்கு!




விடுமுறை எதுவும் கிடையாது;விதி முறைகளும் கிடையாது;16 மணி நேரம் வேலை;என்று் பாடுபட்டவர்களுக்கு் ஓரளவு பலன் கிடைத்திருக்கின்றது.மேற்குறிப்பிட்ட காலத்திற்கு சம்பளமாகவும், 8 மணி நேரத்திற்கு அதிகமாக வேலை பார்த்ததற்கும் சேர்த்துக் கொடுக்கப்பட்ட தொகை இது.8 மணி வேலை நேரம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.ஜன்வரி 26, மே 1,ஆகஸ்டு 15, அக்டோபர் 2, மேலும் 5 நாட்கள் மத விடு்முறைகளும் உண்டென்று தீர்ப்பாகியுள்ளது.ஏப்ரல் 2004 முதல் மார்ச் 2006 வரையுள்ள காலத்திற்கு ஒரு நபருக்கு 2.32 ல்ட்சம் ரூபாய் வீதம் 42 ஊழியருக்கு அர்சு வழ்ங்க வேண்டும் என்று தீர்ப்புக் கிடைத்திருக்கின்றது.இஃது வழக்குத் தொடர்ந்த பூமிநாதன் உட்பட 42 ஊழியர்களுக்கு ஒருவருக்கு ரூபாய் 2.29 லட்சம் கிடைக்கும். ஏதோ பெரிய தொகைபோல் தோன்றக்கூடும். மாதந்தோறும் அந்த ஊழியர்கள் அடைந்த துன்பங்களோடு ஒப்பிடுகையில் இது பெரிய விஷயமில்லை. மேலும் வாங்கிய கடனுக்கே இது போதாது/சரி்யாய் இருக்கக்கூடும். ஒழுங்காக வாழ்ந்தோர் எழுந்து கொள்வர்.

இந்தத் தீர்ப்பின் வழிகாட்டுதலில், தமிழகம் முழுவதும் உள்ள 36000-ம் ஊழியர்களும் பயனடைவர். இதற்கு 700 கோடி தேவைப்படு்ம் என்று தெரிகின்றது. ஆனால், அவர்களும் வழக்காடித்தான் இதைப் பெற முடியும் என்றே கருதுகின்றேன்.

2006-2009 -மீண்டும் போராட்டமா தெரியவில்லை.தமிழக கடை& வியாபார நிர்வாகச் சட்ட்ங்களுக்குட்பட்டு் இந்தத் தீர்ப்பினை வ்ழங்கியு்ள்ள நீதிபதி S.F.அக்பர் பாராட்டுக்கு உரியவர்.அச்சமின்றி நியாயம் கேட்கத் துணிந்த ஊழியர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

ஆனால், அரசாங்கம் ஊழியர்கள் நீதிமன்றம்வரை செல்லவிட்டது எந்த வகையில் நியாயம்? TASMAC ஊழியர்களுக்குப் பிச்சை போட வேண்டியதில்லை. அவர்களையும் அரசு/பொதுத்துறை ஊழியர்களுக்கு இணயாக நடத்தி்ட் வேண்டும்.அடிப்படைச் சம்பளம், வாரவிடுமுறை,அரசு விடுமு்றைகள், GPF,DA.INSURANCE,MEDICAL...முதலான அனைத்து வசதிகளையும் தானே முன்வந்து தருவதுதானே நியாயமாக இருக்க முடியும்?

படங்கள் வெளிநாட்டுச் சரக்கு. இணையத்தில் எடுத்தது.குடிப்பது என்று தீர்மானித்தாயிற்று்; அழகியலையும் சிறிது சுத்ததையும் கடைப்பி்டிக்கலாமே,இருபாலரும்!

கட்டுரை இன்னும் முடியவில்லை. அடுத்த பகுதியிலும் தொடர்கின்றது. வலைப்பூவில் தொடர் எழு்தக் கூடாதா என்ன? அடுத்த தலைப்பு : TASMAC-ஐ கொண்டு செல்லுங்கள் ஊருக்கு வெளியே-என்பதுதான், படித்திட வருவீகளா, நண்பர்களே? மது வாடையே தெரியாத ஒரு தலைமுறைக்கு சாராயத்தை அறிமுகப் படுத்திய புண்ணியவானின் பெயர் தெரியுமா? வி்டை அடுத்த பகுதியில்.....source:TOI-29-10-2009

0 comments:

Post a Comment

Kindly post a comment.