Tuesday, December 1, 2009

அம்மான்னாலும் முடியாது! அப்பான்னாலும் முடியாது மெஜாரிட்டின்னாலும் முடியாது! மைனாரிட்டினாலும் முடியாது அப்பா-அம்மா ஆகணுமுன்னா அரசு சொன்னதைச் செய்தே தீரணும்

ஆம்! வந்துவிட்டது சட்டம்! இந்து/இந்திய-கிறி்ஸ்துவ/முகம்மதிய ஷரியத்/சிறப்புத் திருமணம்/எந்தத் திருமணமாயிருந்தாலும் பதிவு செய்வது கட்டாயமாகி்விட்டது. 24-11-2009-க்குப் பின் நிகழும் திருமணங்கள் அனைத்தும் பதிவு செய்வது கட்டாயம். NO EXEMPTION


சார்பதிவாளர்களே திருமணப் பதிவாளர்களாக நியமிக்கப்பட்டுவிட்டனர். விண்ணப்ப படிவங்கள் அனைத்து பதிவு அலுவகங்களிலும் கிடைக்கும் திருமணம் நடைபெற்ற 90 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.100ரூபாய் கட்டணம். சாட்சிகளின் ,முகவரி, மற்றும் அடையாளச் சான்றுகளையும் விண்ணப்பத்துடன் இணைத்திடல் வேண்டும். திருமணப் பதிவு மறு்க்கப்பட்டால்,30 நாட்களுக்குள், மாவட்டப் பதிவாளரிடம் முறையீடு செய்யலாம்.அதிலும் பிரச்சினை என்றால் அடுத்த 30 நாட்களுக்குள் பதிவுத் துறைத் தலைவரை அணுகலாம். அவரது தீர்ப்பே இறுதியானது.(90 நாட்கள் அவகாசம் எத்ற்கு? பதிவுச்சான்றிதழ் இருந்தால்தான் திருமணம் செயயமுடியும் என்றிருப்பதுதானே சரியாக இருக்க முடியும்? thurumaNaththiRkuk kodukkappadum mukkiyaththuvam pathuseyvathaRkum kodukkappadavENdum enpathu uNmaiyaanaal 90 nhaadkaL avkaasam ellaam koodaathu)

எவருக்கும் மதத்தின் பெயராலோ/சாதியின் பெயராலோ விதிவிலக்குகள் கிடையாது. இஃது, பாராட்டத்தக்க சிறப்பம்சம். தவறினாலோ/தவறான தகவல்கள் தரப்பட்டிருப்பது நிரூபிக்கப் பட்டாலோ வழக்குத் தொடரப்படும். அபராதமும் விதிக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு: www.tnreginet.net இணைய தளத்தில் பார்க்கலாம்.
sourcse:dinamani.01-12-2009.

அதுசரி. பிறப்பு/இறப்பு பதிவதற்கான நடைமுறையினையே திருமணப் பதிவு நடவடிக்கைகளிலும் பின்பற்றினால் என்ன குறைந்துவிடும்?

மணமக்களின் பெற்றோரைவிடவா வேறு சாட்சிகள் வேண்டும்? பெற்றோர் தெய்வத்திரு/ நி்னைவில் வாழும் என்றாகிவிட்டால் அதற்கான மாற்று ஏற்பாடுகளின்படி/உறவினர்கள் கையொப்பம் இட்டால் போதாதா?

அந்தந்தப் பகுதிகளில்உள்ள மக்கட் பிரதிநிதிகளின் கையொப்பம் போதாதா? திருமணம் ஆகும் எல்லோருமா கோர்ட்/கேஸ்/ வக்கீல்/வாய்தா என்று அலையப் போகின்றார்கள்?

மணமகள்/மணமகன் உடல்நல தகுதிச் சான்றிதழ் கட்டாயமாக்கப் படுவதற்குத் தயங்க்குகின்ற அரசாங்கம், ம்னமகிழ்ச்சியோடு துவங்க வேண்டிய மணவாழ்க்கைக்கு இவ்வளவு கெடுபிடி ஏன்? பிறப்பு/இறப்பு பதிவு முறைகளையே இதிலும் பின்பற்றினாலே போ்துமானது.குறைபாடுகள் இருக்கும்; பிரச்சினைவரும்; என்று அரசு நினைக்குமானால், பி்ற்ப்பு/இறப்பு பதிவுகளிலும் கோளாறு என்றுதானே பொருள்?அப்படியென்றால் அவற்றையும் பதிவாளர்களிடம்தானே பதிவு செய்ய வேண்டும்?

எப்படியோ எல்லோருக்குமே ஒரே சட்டம் என்றவாறு எந்தவித விதிவிலக்குமில்லாமல் வந்துள்ள சட்டம் இது் ஒன்று மட்டும்தான் என்றுதோன்றுகின்றது. சமத்துவம் வாழ்க.

சமூக அக்கறையுள்ள வழக்கறி்ஞர்கள் முன் முயற்சி எடுத்தால் இந்தப் பதிவு முறைதனை எளிமைப்படுத்தலாம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.