முதியோர் இல்லங்கள் நல வாரியம் ???
கூட்டுக் குடும்பச் சிதைவு பல கோளாறுகளைச் சமூகத்தில் உருவாக்கி விட்டது.
சொத்து பத்துள்ள முதியோர்களே பாசத்திற்கு ஏங்குகின்றனர்.
இலவச சேவை என்னும் பெயரில் இயங்குபவை, நடுத்தட்டு வர்க்கத்தாரின் எதிர் பார்ப்புகளுக்கு ஈடு கொடுத்திடப் போதுமானதாக இல்லை.
வசதியான இல்லங்களை நோக்கினால் கேட்கும் முன்பணம்/இழப்புடன் திரும்பத் தருவதாகக் கேட்கப் படும் முன்பணம் NRI குடியேறிகளின் bUDGET-க்குத்தான் ஒத்து வரும்!
பேரன், பேத்தி, மகன், மகள், இன்னோரன்ன உற்றார், சுற்றம், நட்புக்கும் அப்பாற்பட்ட தேடலை வேண்டுவோருக்கு ஏதேனும் பாதுகாப்பிடங்கள் உள்ளனவா?
சொல்லுங்கள் வலைப்பூ நண்பர்களே! அப்படிப்பட்டவை கண்ணில் பட்டாலும் குறிப்பிட்ட ஜாதியார்களுக்குத்தான் பயனாளியாகின்றன.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இன மத மொழி கட்டுப் பாடுகளின்றி "அக்கடா" என்று விழுந்து கிடந்து எழுந்து திரும்ப அல்லது நிரந்தரமாகத் தங்கிவிட நியாயமான பொருட்செலவில் ஏதேனும் இடங்கள் உள்ளனவா தெரிந்தால் சொலுங்களேன்?
இலவசமென்பதற்காக ஆண்டு முழுவதற்குமே அட்டவணை தயாரித்துக் கொண்டு தங்குகுமிடத்துடன் கூடியவற்றை awail செய்ய விருப்பமில்லை.
வீம்பு காட்டினால் lodge-hotel-taxci என்று எக்கச்சக்கம் ஆகின்றது.
0 comments:
Post a Comment
Kindly post a comment.