Saturday, December 19, 2009

சமூக சமத்துவப் படைத் தலைவர் சிவகாமிக்கு ஓர் பகிரங்கக் கடிதம்!!




புதிய கட்சியைத் துவக்கியுள்ளீர்கள்; வாழ்த்துக்கள்!

புதிய கட்சி வேண்டாம்; புதிய பாதை வேண்டும் என்று தங்களுக்காகவே எழுதப்பட்ட பகிரங்கக் கடிதத்தைத் தங்கள் பார்வைக்குக் கொண்டு வராத வகையில் நான் ஓர் குற்றவாளி!

அதனைத் தங்கள் பார்வைக்குக் கொண்டுவர,

http://rssairam.blogspot.com/2009/11/blog-post_8028.html என்ற பக்கத்தினைப் படியுங்கள்!

என்னைப் பற்றித் தெரிந்து கொள்ள

இந்த சுட்டியினை இங்கே சொடுக்கி இதில் உள்ள தகவல்களை/ செய்திகளை ஒன்று

விடாமல் படியுங்கள்!

சிறுதுரும்பும் பல்குத்த உதவும் என்பது பழமொழி!

என் எண்ணங்களையும், கருத்துக்களையும் உங்கள்பால் திணித்திட விரும்பவில்லை. ஆனால், அதே நேரத்தில் உங்களைத் தனியே உங்க்ள் மனம் போன போக்கில் விட்டு விடவும் மனசில்லை!

தங்கள் கொள்கைகளில் எந்தப் புதுமையும் காணவில்லை. மற்றக் கட்சிகள் அணி/சங்கம் என்று சொன்னவற்றை எல்லாம் தாங்கள் படை என்று கூறியுள்ளீர்கள், அவ்வளவுதான்!

எனவே, தங்களிடம் நான் கேட்பதெல்லாம் ஒன்றுதான்!

பூனைக்கு மணிக்கட்டுவது யாரென்ற நிலையில் இன்றைய தமிழகம் இருக்கின்றது. முழுமையான வெற்றியினைப் பெற வேண்டுமானால், அதற்கொரு வழி இருக்கின்றது.

இல்லை! ருத்திராட்சப் பூனையாக இருந்து கொண்டு நமது பலத்தைக் கொண்டு ஜெயித்துவிட்டு ஓரிரு சீட்டுக்கள் கொடுத்து ஏமாற்றிக் கொண்டிருப்போருடன் கூட்டணி வைக்கும் பார்முலா என்றால் அதற்கொரு வழி இருக்கின்றது.

என்ன பதில் தங்களிடம்? இந்த கேள்விக்குப் பதில் தர விரும்பாவிட்டால் எனக்கொன்றும் நஷ்டமில்லை!

உங்கள் குறிக்கோள் எப்படி இருக்க வேண்டும்?


கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது.-772.


நன்றி: தினமணி, சனிக்கிழமை, 19,டிசம்பர்,2009

0 comments:

Post a Comment

Kindly post a comment.