அது என்ன ஐயா "தவறான" மின் உபயோகம்? மாட்டிக் கொண்டதால் உண்மை வெளி வருகின்றதா? அதனால்தான் "திருட்டு" என்ற வார்த்தைப் பயன்பாடு இல்லையா?
சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்ல இரண்டு சாலைகள் உள்ளன. ஒன்று! கிழக்குக் கடற்கரைச் சாலை! புதியது, என்பதைவிட, வசதி படைத்தவர்களுக்கு சொர்க்கபுரி! இரவு நேரங்களில் சாலைகளில் குடித்து விட்டுக் கும்மாளம், ஆட்டம், பாட்டம் , கொண்டாட்டம் என்று யுவன்/யுவதிகள் காவல் துறையில் மாட்டிக் கொண்டால் மாமூலில் சரியாக்கப்படுவதும், நடிகர்/நடிகைகள் கூட மாட்டிக் கொண்டால் எச்சரித்து விடப்படுதல் அல்லது எப்போதாவது பத்திரிக்கை பெட்டிச் செய்தியா(க்)- கி விடுவதும் சர்வ சாதாரணமான நிகழ்வுகள்!
மற்றொன்று பழைய மகாலிபுரம் சாலை! பழைய/புதிய மகாபலிபுரம் இர்ண்டு இருக்கின்றனவா என்ற ஐயப்பாட்டைத் தோற்றுவிக்கக் கூடிய பெயர்! சங்கமம் கனிமோழி சாலை என்றுகூட, அவர்களுக்குத் தோன்றினால் புதிய பெயரைக் கூட சூட்டிக் கொள்ளலாம்! மகாபலிபுரதிற்குக் கொண்டு சேர்த்திடும் சாலை; புதிதாக east coast road வந்து விட்டாதால் பழைய சாலையாகி விட்டது.
பெயரில்தான் பழைமை இருக்கின்றதே தவிர, புதிதாக இந்த்ச் சாலையில் பயணிப்பவர்களுக்கு நாம் இருப்பது சென்னையா/வெளிநாடா என்றோரு எண்ணத்தை ஏற்படுத்துமளவிற்கு புதிதாய் ஆக்கப்படுவிட்ட சாலை!
அடையாறு மத்திய கைலாஷ் கோவிலிலிருந்து உள்ளே செல்லத் துவங்கியதிலிருந்தே இந்த உணர்வு உதயமாகிவிடும். இடப்புறம் பறக்கும் ரயில் பாதை சிறிது தூரம் நம்மோடு பயணிக்கும். பின்னர் உயரமான வண்ண வ்ண்ணக் கட்டிடங்கள் பல்வேறு வடிவங்களில் சாலையின் இருமருங்கிலும் நம்மை வரவேற்கும். அனைத்துமே நம் இந்திய கணினி வல்லுநர்களை மூலதனமாக்கி அந்நியப் பணத்தை அள்ளித் தரும் அட்சய பாத்திரஙகள்.
அந்தக் கட்டிடங்கள் அனைத்துமே IT- கம்பெனிகளுக்குச் சொந்தமானவைதான் என்று நாம் நினைத்தால் ஏமாந்து போவோம். மிகப் பெரும்பாலனவை யாருக்கோ சொந்தமானவை! IT நிறுவனங்கள் பல ஆண்டுகளுக்கு லீசுக்கு- குத்தகைக்கு எடுத்திருக்கின்றன. IT நிறுவனங்களைவிட இத்தகைய கட்டிடங்களின் உரிமையாளர்களின் புத்திசாலித்தனம் பாராட்டுக்குரியுது. ஏனெனில், எந்த ஏற்ற இறக்கமும் இவர்களுக்கு ந்ஷ்டத்தை ஏற்படுத்தாது. வாடகை மொத்தமாகவோ/மாதந்தோறுமோ/ஆண்டிற்கொருமுறையோ தவறாமல் வந்துவிடும்.
பினாமிச் சொத்துக்கள் குறித்த புலனாய்வுப் பத்திரிக்கைகளுக்கு இப்பகுதிக்குள் நுழைந்தால் நல்ல "தீனி" கிடைக்கக்கூடும்.
வருமானவரிதுறையினர் மனசு இப்பக்கம் திரும்ம்பினால், வரி ஏய்ப்புக்கள் பல வெளிச்சத்திற்கு வரக்கூடும்.
பல தொழிற் சங்கத் தலைவர்களின் தூக்கத்தக் கெடுக்கும் "AREA"-க்கள் இந்தப் பகுதியிதான் உள்ளன. அவர்கள் எல்லாம் சேர்ந்து 1947-லிருந்து இன்றுவரை தொழிலாளர்களுக்காகப் பாட்பட்டுக் களைத்துப் போன நிலையில் புதிதாக ஒரு பேருண்மையைக் கண்டு பிடித்திருக்கின்றார்கள்!தினமணியில் வந்த செய்தி. அனத்துத் தொழிலாளர்களும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம்.
உலகத் தொழிற் சங்கச் சட்ட திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்ப்ட்டது போல் தோன்றினாலும், சட்டப்படி இன்னும் மதிய அரசால் சட்டமாக்கப் படவில்லை என்று திடீர் ஞானோதத்திற்கு ஆட்பட்டு, மதவாதக் கட்சியின் தொழிற்சங்கமான பாரதீயத் தொழிற்சங்கக்களைக் கூட விட்டுவைக்காமல் கூட்டணி அமைத்து, மத்திய அரசு தொழிற்சங்கம் வைத்தல் போன்ற எங்கள் கோரிக்ககளை சட்டமாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றார்கள். வேண்டுமென்றுதான் இந்தப் பத்தியை/பாராவை அவர்களைப் போலவே சுற்றி வளைத்து எழுகின்றேன்.
கோடீஸ்வரக் குடும்பத்தில் பிறந்து லண்டன் சென்று பார்-அட்-லா பட்டம் பெற்றுக் கோமானக வாழ்ந்திருக்க வேண்டியவர்! பட்டி தொட்டிகளுக்கெல்லாம் கிடைத்திட்ட வாகனங்கள் மூலமாகவெல்லாம் (இன்று பலர் அனுபவிக்கும் ஃபஸ்ட் கிளாஸ்/ ஏ.சி. டூ டையர்/ த்ரீ டையர்/ இரண்டாம் வகுப்பு ரிசர்வேசன் கூட) பயணித்து, கிடத்ததச் சாப்பிட்டு, கையிலிருக்கும் நாளிதழையே படுக்கையாக்கி, ஆங்கிலப் புலமை (அந்தக் காலத்தில் இங்கிலீஷ் பேசும் தொழிற்சங்கத் தலைவர் என்று ஒவ்வொரு தொழிலாளியும் பெருமை கொண்ட தோழர்), அறிவுத் திறன், உடல், பொருள், ஆவி அனைத்தையுமே கட்சிக்கும் தொழிலாளருக்கும் அர்ப்பணித்து வாழ்ந்து மறைந்த பெரியவர் கே.டி.கே. தங்கமணியின் மறைவு ஊர்வலத்திலும். பெசண்ட் நகர் மின் மயானத்தில் இரங்கற் கூட்டம் போட்டதில் காட்டிய அக்கறயில் நூற்றில் ஒரு பங்கை இன்றையச்சூழலில் மக்களுக்கு என்ன தேவை என்பதில் காட்டுவார்களானால்- என்றோ வரப் போகும் ஓரிரு MLA / MP பதவிகளுக்கான கூட்டணிச் சிந்தனைகளயெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு செயல் படுவார்களானால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
K.T.K. தங்கமணியின் இரங்கற் கூட்டத்தில் கலந்து கொண்ட என் மகன், கூட்டங்க் கலயும் வரை அசையாமல் அமர்ந்து உன்னிப்பாகக் கவனித்துவிட்டு, இப்படிப் பட்டவர்களெல்லாம் கூட அரசியலில் இருக்கின்றார்களா அப்பா? என்று கண்ணீர் மல்கக் கேட்டதை நினைத்து கண்களில் வடியும்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டெ பணியினைத் தொடர்கின்றேன்.
மூளையைக் காசாக்கும் புத்திசாலியான IT உழைப்பாளிகளே உங்களுக்கு ஒன்று சொல்வேன். சங்கம் வைத்திடும் உரிமயைப் பயன்படுத்தும் காலம் வரும் பொழுது நீங்களாகவே சங்கத்தை நடத்திக் கொள்ளுங்கள். எந்தக் கட்சிக்காரர்களையும் உள்ளே நுழைய அனுமைதிக்காதீர்கள்! நிர்வாகப் பொறுப்பு முழுவதும் -குறிப்பாகத் தலைவர் பதவி உட்பட எல்லாமே உங்களிடமே இருக்கட்டும். கருத்தரங்கங்கள் போன்றவற்றிற்கு மட்டுமே அவர்களைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் IT-துறை நன்றாக இருக்கும்.
தன் ஒரே மகள் பாம்பு கடித்து இறந்துவிட்டாள் என்ற தகவல் பெற்றும்கூட ஜெயிலை விட்டு வெளியே வந்து பார்க்காமல், தண்டனைக்காலம் முடிந்த்வுடந்தான் வெளியே வருவேன் என்று வாழ்ந்து காட்டி மறைந்த திருச்சி எம்.கல்யாண சுந்தரம் போன்ற தலைவர்கள் எல்லாம் இன்று இல்லை. அதனால்தான் எச்சரிக்கையாக முன்னரே கூறுகின்றேன்.
தேவையும் நிர்ப்பந்தமும் ஏற்படும் பொழுது அதனை எதிர் கொள்ளும் துணிச்சலும் வீரமும் விவேகமான செயல்பாடுகளும் விலங்கினங்களுக்கே இருக்கும் பொழுது ஆறறிவு படைத்த மனிதனுக்கு இல்லாமலா போய்விடும்? இருக்கிறது. காலங் காலமாகத் தொடர்ந்தும் வருகின்றது. சிக்கல் ஏற்படும் பொழுது அதனைத் தீர்க்கும் தலைவனும் உங்களிடையே தோன்றுவான். இது இயற்கை விதி.
ஸ்டாண்டர்ட் மோட்டார் தொழிற்சாலை மீண்டும் திறக்கப் படவே இல்லை. டன்லப் தடுமாறுகின்றது. முத்தரப்புப் பேச்சு வார்த்தை என்ற பேரில் மூன்றாவதாக கட்சித் தலைவர்களை உள்ளே அனுமதித்தால் மூடுவிழா நிச்சயம்!
எனவே நீங்களளே கலந்தாராய்ந்து முடிவு செய்யுங்கள். நிர்வாகத்தோடு பேசும்பொழுது சரியான தீர்வுக்கு வர முடியவில்லையா "இன்று போய் நாளை வா" பார்முலா உதவி செய்யும். பிரசினையை பெற்றோரிடமும் கலந்தாராயலாம். கூட்டுச் சிந்தனை நல்ல முடிவினைத் தரும். ஒரு முறை தலமைப் பொறுப்பில் இருப்பவரையே தொடர்ந்து தளபதியாகி விடாதீர்கள்.
லயன்ஸ் கிளப் போன்றவற்றில் இருப்பது போன்று சுழற்சி முறையில் எல்லோருமே பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல் தளபதி ஆகுங்கள்.ஆண்/பெண் பேதமெல்லாம் வேண்டாம். வளமான வாழ்க்கை நிச்சயம் தொடர்கதையாகும்.
இப்பொழுது old mhaapalipuram saalaikku வருவோம். ஆங்கே செயல்படும் கம்பெனிகள் மின்சாரத்தைத் தவறான வழியில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி 2% தேதி பேப்பரில் வந்துள்ளது. தவறு என்றுதான் சொல்கின்றார்களே தவிர திருட்டு என்று சோதனைக்கு வந்த தமிழ்நாடு மின் வாரிய அதிகாரிகளால் கூற முடியவில்லை. அதிகாரிகளுக்கும் நிறுவன நிர்வாகிகளுக்கும் ஆயிரம் உறவுகள் இருந்திருக்கக் கூடும்.
அரசியல்வாதியின் சொத்துக் குவிப்பு விஷயமாவது அடிக்கடி வெளியே வந்துவிடுகின்றது. ஆனால் அதிகாரிகள் விஷயம் .....? காண்ட்ராக்ட்/ஒப்பந்தம்/டெண்டர்/ஓப்பன் டெண்டர் எதுவாக இருப்பினும் ஏதெனும் ஒரு வடிவில் லஞ்சமும், ஊழலும் இருந்தே தீரும். மாற்று வழிகள் நிரம்ப உள்ளன. அதைத் தனியாகக் காணலாம், பிரிதோரரிடத்தில்!
இதுபோல் தவறான மின் உபயோகங்கள் எங்கெங்கு இருக்கக் கூடும் எனக் கண்டுபிடித்து தவறை/திருட்டை சரிசெய்யுங்கள். TNEB நிர்வாகிகளே !
அடுத்து பொது மக்கள் சார்பாக ஒரு வேண்டுகோள்!
மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டுவாருங்கள்.
இருமாதங்களுக்கு ஒரு முறை விட்டுக்கு வந்து மீட்டர் ரீடிங்க் பார்ப்பவர்களும். அலுவலகத்தில் மின் கட்டணத்தை வசூல் செய்பவர்களூம் ஒரேநபராகவே இருக்கின்றார்கள்.இது சரியில்லை. இதனால் ஏற்படும் தவறுகளைச் சரி செய்யவே நடையாய் நடக்க வேண்டியதிருக்கின்றது.யாருக்காவது இந்தத் தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
வேலைப் பங்கீடு சரியாக இல்லை. அவசியாமானால் புதிய ஊழியர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளுங்கள்.பணம் வசூல் செய்ய/ மீட்டர் ரீடிங்க் கணக்குப் பார்க்க வெவ்வேறு
ஆட்களைப் போடுங்கள். எங்களிடம் மாதா மாதம் பணம் வசூலித்து விடுங்கள். இருவருக்குமே அது நல்லது.
மின் துறைக்கு வரவேண்டிய பணம் அனாவசியமாக ஒருமாதம் பொது மக்களிடம் இருக்க வேண்டிய அவசியம் ஏன்?
இருமாதங்களுக்கொருமுறை பணம் செலுத்துவதால் அதிகமாக மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தையும் பொதுமக்கள் மீது வலிந்து திணித்து எஙகள் மின் செலவையும் அதிகரிக்கச் செய்கின்றீர்கள். இது எந்த வகையில் நியாயம்?
அண்மையில் சென்னைப் புறகர்ப் பகுதி ஒன்றில் மீட்டரில் கோளாறு. சிபாரிசுடன் மீட்டர் மாற்றவும் பட்டது. 2000-ம் ரூபாய் கேட்டார்கள். 500 ரூபாய்தான் தருவேன் என்று வீட்டுக் காரர் கூறுகின்றார். ரசீது தந்தால் பணங்கொடுப்போம். (கேபிள் சங்கர் தூண்டல்) இல்லை என்றால் எதுவும் வேண்டாம். நானும் வருகின்றேன். என்று சொல்லி வந்துள்ளேன். ஆங்காங்கே லஞ்சத்தில் மாட்டி விடப்படுபவர்களைக் கண்டும்/கேட்டும்/படித்தும் திருந்தாத ஜென்மங்களைத் திருத்தத்தானே வேண்டும்.
கேபிள் சங்கர் மீண்டும் b12 ஊசி போட்டுவிட்டதன் காரணமாக அந்த EB அலுவலகம் ஒரு தவறு செய்திடாமல் தப்பித்துக் கொள்ளப் போகின்றது.
கேபிள் சங்கர் ஜிந்தாபாத்! தவறு/திருட்டு -க்குதுணை போகும் அதிகாரிகள் முரதாபாத்!
திருந்தாவிட்டால் திருத்தப் படுவீர்கள்! அதிகாரிகளுக்கு மட்டுமல்ல / அரசியல் வாதிகளுக்கும் தான்!
பொது சேவை அமைப்புக்கள் சொத்து சேர்க்கக் கூடாது என்று பாடம் நடத்தும் சிகப்புக் கட்சிகள், அடுக்கு மாடிக் கட்டிடங்களைக் க்ட்டத் துவங்கிவிட்டன். வரவேற்கப் பட வேண்டிய மாற்றம். சந்தோஷம்!
வெளியூர்களில் இருந்து வருவோர் கேட்டால் இலவச உணவும், இலவச தங்குமிடமும் கொடுங்கள். முடிந்தால் நன்கொடையாக ஏதெனும் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள்.
பெரியார் பேரைச் சொல்லிக் கொண்டு பிரச்சார நிறுவனம் என்று சொல்லிக் கொண்டு 5 ரூபாய் கூடப் பெறாத மாத இதழுக்கு 10/15 விலை வைக்கும் கொடுமையைப் போல் நீங்கள் நடக்காதீர்கள்! நன்கொடை விலை என்று போடுவதுதான் அவர்கள் ஃபார்முலா ஏன் மாற்றினார்கள்? நாள்/வார/ மாத இதழாக இருந்தாலும் லாபம் பார்க்காமல், "nO loss no gain" -தானே சரியான திசைவழி! வீரமணி அண்ணாசிக்கு எழுதிய பகிரங்கக் கடிதம் புறக்கணிக்கப் பட்டால் நோட்டீஸ்கள் பறக்கும்.
எல்லோருமே தவறுகளத் திருத்திக் கொள்வோம்! மக்களுக்காக நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவோம்.
!. மின் தவறான/திருட்டு சரிசெய்தல் வேண்டும்.
2. அரசியல் கட்சித் தலைவர்கள் தொழிலாழிகளைக் குழப்பாதீர்கள். சந்தா வேண்டாம். ஆண்டிற்கொருமுறை நன்கொடையாக ஏதேனும் தருகின்றோம். பிழைத்துப் போங்கள்! எங்கள் பிரச்சினயை எங்களுக்குள் ஒருவரைத் தலவராகத் தேர்ந்தெடுத்துத் தீர்த்துக் கொள்வோம். கட்சியயும்/சங்கத்தையும் போட்டுக் குளறுபடிகள் வேண்டாம்.
3. மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்த விடுங்கள்.
கல்யாண வீட்டில் அரசியல் பேசும் போது, TNEB-விவகாரத்தில் தோன்றிய எண்ணங்களைக் கூறியுள்ளேன். அது சரி என்றால் இதுவும் சரிதான்.
முறையான கட்டுரைகள் தொடரும். உண்மக்கு யாரும் உறை போட்டுவிட முடியாது.
0 comments:
Post a Comment
Kindly post a comment.