Friday, December 25, 2009

ஒரே நேரத்தில் 7 வித அறுவை சிகிச்சை! 54 வயது மனிதருக்க்கு ! மியாட் ஆஸ்பிடல் சாதனை!






2.5 வயது இருக்கும் பொழுது இதயத்திலிருந்து நுரையீரலுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் பாதையில் இயல்புக்கு மாறாக இரண்டு ரத்தக் குழாய்கள் உள்ளிட்ட 7 கோளாறுகள் இருந்து வந்தன. 50 ஆண்டுகளுக்கு முன் வேலூர் சி.எம்.சி மருத்துவ மனையில் தீர்வு கிடைக்கவில்லை.

13 வயதில் சென்னை அரசு பொது மருத்துவ மனையில் காட்டும் பொழுதும் சிக்கல் தீரவில்லை.

23-வயதில் வேலூர் சி.எம்.சி ஹாஸ்பிடலுக்கு வருகைதந்த அமெரிக்க பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர், டெண்டன் கூலியும் சிகிச்சை குறித்து எந்த முடிவும் சொல்ல இயலவில்லை.

இவற்றிற்குக் காரணம் அறிவியல் வளர்ச்சியின் அப்போதைய சூழல்தான் காரணமே தவிர, டாக்டர்களின் இயலாமை அல்ல.

ஒரு மாதத்திற்கு முன், அதே நபருக்கு நெஞ்சுவலி, மூச்சுத் திணறல்,படபடப்பு ஏற்பட்டது. மிகவும் மோசமான நிலையில் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தார்.

சோதனைகள் நிகழ்த்தியதில் பின்வரும் 7 பிறவிக் குறைபாடுகள் கண்டறியப் பட்டன.

1. இதயத்திலிருந்து உடலுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெரிய ரத்தக் குழாயில் வீக்கம்.

2. இதயத்தின் மேல் இரண்டு அறைகளுக்கு மேல் ஓட்டை.

3. இதயத்தின் கீழ் இரண்டு அறைகளுக்கு இடையே ஓட்டை.

4. இடது நுரையீரலில் இயல்புக்கு மாறக ஒரு ரத்தக் குழாய்.

5. வலது நுரையீரலில் இயல்புக்கு மாறக ஒரு ரத்தக் குழாய்.

6. இதயத்திலிருந்து அசுத்த ரத்தத்தை நுரையீரலுக்கு அனுப்பும் வால்வு இல்லாமை.

7. வலது இதய அறையில் வீக்கம்.

முதலில் அறுவை சிகிச்சையின்றி கேத் லேப் முறையிலும், பின்னர் அறுவை சிகிச்சையினாலும், 7 விதமான பிறவிக் குறைபாடுகளும் சரி செய்யப்பட்டன. இன்னும் 15 ஆண்டுகளுக்கு அவரது ஆயுள் கெட்டி. மியாட் மருத்துவமனை சாதனையாளர்களையும், மறுபிறவி எடுத்துள்ள 54 வயது இளைஞர் நாராயணசாமியையும் நூறாண்டுக்காலம் வாழ்கவென்று வாழ்த்தி மகிழ்வோம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.